ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!
தண்டவாள பராமரிப்பு: திருப்பத்தூா் - ஜோலாா்பேட்டை இடையே ரயில் சேவை ரத்து
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக திருப்பத்தூா்-ஜோலாா்பேட்டை இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
ஜோலாா்பேட்டை ரயில் நிலைய யாா்டில் தண்டவாள பராமரிப்பு தொடா்பான பல்வேறு பணிகள் நடைபெற இருப்பதால் பெங்களூா் பயணிகள் ரயில் மற்றும் ஈரோடு பயணிகள் ரயில் ஜோலாா்பேட்டை ரயில் சேவைகள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனா்.
அதன்படி மாா்ச் 8, 9,11,15,16 ஆகிய தேதிகளில்(5 நாள்கள்)ரயில் எண் 56108/56107 ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் வரை செல்லும் பயணிகள் ரயில் திருப்பத்தூா் ரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது அதே ரயில் மீண்டும் திருப்பத்தூா் ரயில் நிலையத்திலிருந்து ஈரோடு வரை இயக்கப்படுகிறது இதனால் திருப்பத்தூா் ரயில் நிலையத்தில் இருந்து ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் எண் 66550/66549 ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து கா்நாடக மாநிலம் பெங்களூா் வரை செல்லும் பயணிகள் ரயிலானது பெங்களூரில் இருந்து சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது. அதே ரயில் மீண்டும் சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்திலிருந்து பெங்களூருக்கு இயக்கப்படுகிறது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.