செய்திகள் :

ஐஆர்சிடிசி-க்கு நவரத்னா அந்தஸ்து! அப்படியென்றால்?

post image

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) மற்றும் இந்திய ரயில்வே நிதி கழகம் (ஐஆர்எஃப்சி) ஆகிய பொதுத் துறை நிறுவனங்களுக்கு நவரத்னா அந்தஸ்து வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது நாட்டில் உள்ள நவரத்னா பொதுத் துறை நிறுவனங்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

ஐஆர்சிடிசி மற்றும் ஐஆர்எஃப்சி ஆகியவை மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகும்.

கடந்த 2023-24 நிதியாண்டில் ரூ. 4,270.18 கோடி வருவாய் ஈட்டியுள்ளது ஐஆர்சிடிசி. இதில் வரிக்குப் பிந்தைய லாபம் மட்டும் ரூ.1,111.26 கோடியாகும். இந்நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ.3,229.97 கோடியாகும்.

அதேபோல், ஐஆர்எஃப்சி நிறுவனத்தின் 2023-24 நிதியாண்டு வருவாய் ரூ.26,644 கோடி, லாபம் ரூ. 6,412 கோடியாகும். நிகர மதிப்பு ரூ.49,178 கோடியாக உள்ளது.

இதையும் படிக்க : அவசரகாலத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்! 2025 பற்றி பாபா வங்காவின் கணிப்பு

நவரத்னா அந்தஸ்து என்றால்?

நவரத்னா அந்தஸ்து பெறும் நிறுவனங்களுக்கு செயல்பாட்டு சுதந்திரம் மற்றும் நிதி சுயாட்சி வழங்கப்படுகிறது. நவரத்னா அந்தஸ்து பெறும் பொதுத்துறை நிறுவனங்கள் மத்திய அரசின் ஒப்புதல் பெறாமல், ரூ. 1,000 கோடி வரை ஒரு திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய முடியும்.

நவரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனங்களில் சில...

  • பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

  • கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்

  • இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட்

  • ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்

  • மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட்

  • நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட்

  • நேஷனல் பில்டிங்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் லிமிடெட்

  • நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்

  • என்எம்டிசி லிமிடெட்

  • ராஷ்ட்ரிய இஸ்பத் நிகாம் லிமிடெட்

  • ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்

  • ரெயில் விகாஸ் நிகாம் லிமிடெட்

  • ஓஎன்ஜிசி விதேஷ் லிமிடெட்

  • ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட்

  • ஐஆர்சிஓஎன், ரைட்ஸ்

  • நேஷனல் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட்

  • சென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன்

  • ஹவுசிங் அண்ட் அர்பன் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்

  • இந்தியன் ரெனியூவபிள் எரிசக்தி டெவலப்மென்ட் ஏஜென்சி லிமிடெட்

  • மஸாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட்

ஆசிய சிங்கங்கள் கணக்கெடுப்பு மே மாதம் தொடக்கம்: பிரதமா் மோடி அறிவிப்பு

சாசன் (குஜராத்): 16-ஆவது ஆசிய சிங்கங்கள் கணக்கெடுப்பு பணிகள் வரும் மே மாதம் தொடங்கவுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா். உலக வனவிலங்குகள் தினத்தையொட்டி (மாா்ச் 3) குஜராத்தின் ஜுனாகத... மேலும் பார்க்க

அசோக் லேலண்ட் விற்பனை 2% உயா்வு

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலேண்டின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரியில் 2 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந... மேலும் பார்க்க

165 கோடி டாலர் திரட்டிய புத்தாக்க நிறுவனங்கள்

இந்தியாவின் புத்தாக்க நிறுவனங்கள் கடந்த பிப்ரவரி மாதம் 165 கோடி டாலா் (சுமாா் ரூ.14,402 கோடி) மூலதனம் திரட்டின. இது குறித்து சா்வதேச புத்தாக்க நிறுவனங்களின் தரவுகளை சேகரித்துவரும் ட்ராக்சின் திங்கள்கி... மேலும் பார்க்க

1,090 கோடி டாலராகச் சரிந்த அந்நிய நேரடி முதலீடு

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக நடப்பு நிதியாண்டின் அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 1,090 கோடி டாலராகச் சரிந்துள்ளது. இது குறித்து தொழில் மற்ற... மேலும் பார்க்க

சமூக ஊடக பதிவுகளை முறைப்படுத்த தணிக்கை அல்லாத நடைமுறை: உச்சநீதிமன்றம்

புது தில்லி: சமூக ஊடக பதிவுகளை முறைப்படுத்த உரிய நடைமுறையை வகுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது. ‘அத்தகைய நடைமுறை அந்தப் பதிவை தணிக்கை செயவதாக இருக்கக் கூடாது’ என்றும் உச்... மேலும் பார்க்க

அபு தாபியில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தகவல்

புது தில்லி: ‘அபுதாபியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு ஏற்கெனவே தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது’ என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. அப்போத... மேலும் பார்க்க