செய்திகள் :

ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்கள் பட்டியல் வெளியீடு!

post image

ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்களின் பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் இன்று (நவம்பர் 15) வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறும் என அண்மையில் அறிவிப்பு வெளியானது. முன்னதாக, ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொண்டனர்.

இதையும் படிக்க: இந்தியாவை வெல்ல உதவிய நியூசி. வீரருக்கு அணியில் இடமில்லை!

இந்த நிலையில், ஐபிஎல் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் அதிகாரபூர்வ பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் இன்று (நவம்பர் 15) வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்கும் 574 வீரர்களில் 366 பேர் இந்திய வீரர்கள். 208 வீரர்கள் (3 அசோசியேட் நாடுகளின் வீரர்கள் உள்பட) வெளிநாட்டு வீரர்கள். இந்திய வீரர்கள் 366 பேரில் 318 பேர் அன்கேப்டு வீரர்கள். வெளிநாட்டு வீரர்களில் 12 பேர் அன்கேப்டு வீரர்கள்.

அதிகபட்ச அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடி அடிப்படை விலையில் 81 வீரர்கள் உள்ளனர். ரூ.1.5 கோடி அடிப்படை விலையில் 27 வீரர்களும், ரூ.1.25 கோடி அடிப்படை விலையில் 18 வீரர்களும், ரூ.1 கோடி அடிப்படை விலையில் 23 வீரர்களும் உள்ளனர்.

இதையும் படிக்க: ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்குத் தள்ளி அர்ஷ்தீப் சிங் புதிய சாதனை!

இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள இந்த ஐபிஎல் மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) பிற்பகல் 1 மணிக்கு தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

23 சிக்ஸர்கள்... சதம் விளாசிய சஞ்சு சாம்சன், திலக் வர்மா!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சன், திலக் வர்மாவின் அதிரடியான சதங்களால் 283 ரன்கள் குவித்துள்ளது.இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு... மேலும் பார்க்க

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; தொடரைக் கைப்பற்றுமா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்ஸ்பெர... மேலும் பார்க்க

ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்குத் தள்ளி அர்ஷ்தீப் சிங் புதிய சாதனை!

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் சாதனை படைத்துள்ளார்.இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட... மேலும் பார்க்க

இந்திய அணிக்கு வலிமை சேர்க்க அவர் வந்துவிட்டார்... யாரைக் கூறுகிறார் ரவி சாஸ்திரி?

இந்திய அணிக்கு வலிமை சேர்க்க மூத்த வீரர் வந்துவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடர் இன... மேலும் பார்க்க

இந்தியாவை வெல்ல உதவிய நியூசி. வீரருக்கு அணியில் இடமில்லை!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல காரணமாக இருந்த நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் சேர்க்கப்படவில்லை.நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப... மேலும் பார்க்க

இந்திய டி20 அணியில் மீண்டும் இடம்பிடிப்பதே எனது இலக்கு: கே.எல்.ராகுல்

டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதே தனது இலக்கு என இந்திய அணியின் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.இந்திய அணி வீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல் சில மாதங்களாக தடுமாற்றமான ஆட்டத்தை வெ... மேலும் பார்க்க