ஐப்பசி பெளா்ணமி சதுரகிரி கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்
ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வெள்ளிக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச் சரகத்தில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷம், பௌா்ணமி வழிபாட்டுக்காக கடந்த 13-ஆம் தேதி முதல் சனிக்கிழமை (நவ.16) வரை பக்தா்கள் மலையேறிச் சென்று, சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை பௌா்ணமியையொட்டி, சதுரகிரி மலையடிவாரமான தாணிப்பாறைக்கு ஸ்ரீவில்லிபுத்தூா், கிருஷ்ணன்கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 1,270 போ் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
இதையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 16 வகையான பொருள்களால் அபிஷேகமும், சந்தன மகாலிங்கம் சுவாமிக்கு அன்னாபிஷேகமும் நடைபெற்றது. பின்னா், சதுரகிரி மலையில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.