பாகிஸ்தான்: "70 ஆண்டுகள் மறுக்கப்பட்ட உரிமைகள்" - அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த ...
ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு மூலம் 100 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு!
ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்புடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்புக்கு (ETFA) இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். இதன்மூலம், அடுத்த 15 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டை ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பிலிருந்து இந்தியா பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்து அவர் பேசுகையில், ``வர்த்தக ஒப்பந்தத்தின்கீழ் ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின் 4 நாடுகளில் இருந்து 100 பில்லியன் டாலர் முதலீடுகளை இந்தியா ஈர்த்துள்ளது. அதுமட்டுமின்றி, கூடுதலாக 150 பில்லியன் டாலர் எதிர்பார்க்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, லீக்டன்ஸ்டைன் ஆகிய நான்கு நாடுகளையும் சேர்ந்த நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன’’ என்று அவர் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்த எக்ஸ் பதிவில் அவர், ``இந்தியா- ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதால், உண்மையிலேயே இது ஒரு வரலாற்று நாள்.
இது வர்த்தகம், முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான புதிய வாய்ப்புகளைத் திறந்து, நமது மக்களுக்கும் வணிகங்களுக்கும் பயனளிக்கும்.
இருவருக்கும் பகிரப்பட்ட, இந்திய பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற எதிர்நோக்குகிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.