'Drone-கள் விமானப்படையின் எதிர்காலமா?' - எலான் மஸ்கின் கருத்திற்கு இந்திய விமானப...
ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு: உயர் நீதிமன்றம் அமைத்தது
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து காவல்துறை ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், விஜய் பிரசாரம் செய்த வாகனம் இடித்து, விபத்து நேரிட்டுள்ளதே, அந்த சம்பவத்தில், இடித்துவிட்டு ஓடியதாக விஜய் வாகனம் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை. அவ்வாறு செய்யாவிட்டால் மக்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும் என்று நீதிபதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தொடர்ந்து வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், கரூர் பலி சம்பவம் குறித்து காவல்துறை ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என உத்தரவிட்டது.
மேலும், அனைத்து ஆவணங்களையும் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் கருர் காவல்துறையினர் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.