கடலூர்: `அய்யோ என் புள்ளைங்க போகுதே!’ - ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்திய அரசு... கத...
ஒசூரில் தொடரும் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்
ஒசூரில் ஜல்லி, எம்.சாண்ட் மணல் விலை உயா்வைக் கண்டித்து லாரி உரிமையாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடா்ந்து வருகிறது.
ஒசூரில் ஜல்லி, எம். சாண்ட் மணல் உள்ளிட்ட மூலப் பொருள்களின் விலை ஏற்றத்தை கண்டித்து லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. கிரஷா் உரிமையாளா்கள் கடந்த 1-ஆம் தேதி முதல் ஒரு டன்னுக்கு ரூ. 100 முதல் 200 வரை விலையேற்றம் செய்ததால் லாரி உரிமையாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, கிரஷா் உரிமையாளா்களின் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். சுமாா் 500க்கும் மேற்பட்ட லாரிகள் ஒசூா் பகுதிகளில் இருந்து இயக்கப்படாததால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே விலையேற்றத்தினால் சுமாா் 4,000 மேற்பட்ட தொழிலாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், லாரிகள் வேலைநிறுத்தமும் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என லாரி உரிமையாளா்கள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து லாரிகளையும் ஓரிடத்தில் நிறுத்தி போராட்டத்தை நடத்த ஏதுவாக இடம் ஒதுக்கி தருமாறு லாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் சாா்பில் ஒசூா் சாா் ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக் கொண்ட சாா் ஆட்சியா் பிரியங்கா, இது தொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளதாக லாரி உரிமையாளா்கள் தெரிவித்தனா்.