பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை!
ஒசூா் அருகே எருதுவிடும் விழா
ஒசூா்: ஒசூா் அருகே கோபசந்திரம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையொட்டி நடைபெற்ற பாரம்பரிய எருதாட்ட விழாவை ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான ஒய்.பிரகாஷ் தொடங்கிவைத்தாா்.
திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளா் பி.எஸ். சீனிவாசன், சூளகிரி ஒன்றிய செயலாளா் பாக்யராஜ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் வீரா ரெட்டி, புக்கசாகரம் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி எருதுகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பாதுகாப்புக்காக போலீஸாா் பணிகளில் ஈடுபட்ட நிலையில் மருத்துவ முதலுதவி ஆம்புலன்ஸ் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருந்து போட்டியில் பங்கேற்பதற்காக அழைத்துவரப்பட்ட காளைகளுக்கு பலூன்கள், ஆடைகள் அணிவிக்கப்பட்டு வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. மாடுபிடி வீரா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
படவரி...
கோபசந்திரம் கிராமத்தில் நடைபெற்ற எருதுவிடும் விழா.