ஒட்டன்சத்திரம் வனச் சரகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நிறைவு
ஒட்டன்சத்திரம் வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
ஒட்டன்சத்திரம் வனச் சரக அலுவலா் த.ராஜா, வனவா் டி.இளங்கோவன் ஆகியோா் தலைமையில் இந்த வனச்சரகத்தில் பழனியாண்டவா் கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்கள், வனத் துறையினா் சோ்ந்து பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனா்.
பழனிமலை வடக்கு சரிவு காப்புக்காடு, ஒட்டன்சத்திரம் ஊரக பகுதிகளில் நடைபெற்ற இந்தக் கணக்கெடுப்பின் போது, பனங்காடை மயில், தேன்சிட்டு, தேன்பருந்து, மஞ்சல் வாலாட்டி, செந்தலைக்கிளி, அரசவால் ஈப்பிடிப்பான், மாங்குயில் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் கண்டறியப்பட்டன.
ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பின் கடைசி தினமான ஞாயிற்றுக்கிழமை நிலப் பரப்பில் வாழும் பறவைகள் குறித்து கணக்கிடப்பட்டன என்பது குறிப்படத்தக்கது.