போலி வாக்காளா் அட்டை மீதான விவாதத்துக்கு மறுப்பு: மாநிலங்களவையிலிருந்து எதிா்க்க...
Canada: கனடாவின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்கள்; யார் இவர்கள்?
கனடாவின் புதிய பிரதமர் கார்னியின் அமைச்சரவையில் அனிதா ஆனந்த் பொருளாதார முன்னேற்றம், அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான (Innovation) அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். கமலா கேரா சுகாதாரத்துறை அமைச்சராக இடம்பெற்றுள்ளார்.
மார்க் கார்னியின் புதிய அமைச்சரவையில் இரண்டு இந்தியப் பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் முந்தைய ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையிலிருந்து அப்படியே தொடரும் சில எம்.பிக்களில் இவர்களும் அடக்கம்.

கமல் கெரா: கனடாவின் இளம் பெண் எம்.பி
36 வயது கமல் கேரா டெல்லியில் பிறந்தவர். கனடா நாடாளுமன்ற உறுப்பினரான இளம் வயது பெண் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். பள்ளிப் பருவத்திலேயே கனடாவுக்குக் குடிபெயர்ந்து, யார்க் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டம் பெற்றுள்ளார்.
இவர் 2015ம் ஆண்டிலேயே பிராம்ப்டன் மேற்கு தொகுதியில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் குறித்து அரசுப் பதிவில், ஒரு பதிவுசெய்யப்பட்ட செவிலியர், சமூக தன்னார்வலர் மற்றும் அரசியல் ஆர்வலர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது எக்ஸ் தளப் பதிவில், "ஒரு செவிலியராக நான் எப்போதும் எனது நோயாளிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அதைத்தான் நான் சுகாதாரத்துறை அமைச்சராக ஒவ்வொரு நாளும் செய்யப் போகிறேன். என்மீதான பிரதமர் மார்க் கர்னியின் நம்பிக்கைக்கு மிகவும் நன்றி கடன்பட்டிருக்கிறேன்" என எழுதியுள்ளார்.
அரசியலில் இதுவரை பல்வேறு பதவிகளை வகித்துள்ள கமல் கெரா, முன்னதாக செவிலியர் பணியாற்றியுள்ளார். அரசியலில் இருக்கும்போதே கொரோனா காலத்தில் மீண்டும் செவிலியர் பணிக்குத் திரும்பியுள்ளார்.
அனிதா ஆனந்த்
58 வயது அனிதா ஆனந்த் நோவா ஸ்கோடியா என்ற இடத்தில் பிறந்தவர். ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பிறகு பிரதமர் பதவிக்கான வேட்பாளர்களில் முன்னணியிலிருந்தவர்.
இவரது தந்தை சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வியியலாளர், வழக்கறிஞர் மற்றும் ஆய்வாளராகப் பணியாற்றியுள்ள இவர், டொரெண்டோ பல்கலைக்கழகத்தில் சட்ட பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 2019ம் ஆண்டு ஓக்வில்லே தொகுதியின் எம்.பியாக பதவியேற்றார். கருவூல வாரியத்தின் தலைவர், தேசியப் பாதுகாப்பு அமைச்சர், பொதுச் சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.
மார்க் கர்னியின் அமைச்சரவைக் கடந்த வெள்ளி அன்று பதவியேற்றது. இதில், 13 ஆண்களும் 11 பெண்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks