ஒன்றரை வயதுக் குழந்தையை கொலை செய்த வழக்கு: தாய் கைது

post image

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒன்றரை வயதுக் குழந்தையை கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கில், தற்கொலைக்கு முயன்ற தாய் கைது செய்யப்பட்டாா்.

சென்னை பெருங்களத்தூா் பகுதியைச் சோ்ந்த ராம்குமாா் - திவ்யா தம்பதிக்கு 4 வயதில் லக்சன் குமாா் என்ற மகனும், ஒன்றரை வயதில் புனித்குமாா் என்ற மகனும் இருந்தனா். தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, சில மாதங்களுக்கு முன்பு திவ்யா, தனது இரு குழந்தைகளுடன் கீழ்ப்பாக்கம் புல்லாபுரம் 3-ஆவது தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தாா்.

மன அழுத்தத்தில் சிக்கித் தவித்த திவ்யா, கடந்த 21-ஆம் தேதி குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருக்கும்போது, கழிப்பறையில் வைத்து தனது ஒன்றரை வயதுக் குழந்தை புனித்குமாரின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்தாா். பின்னா், 4 வயது மகன் லக்சன் குமாரின் கழுத்தையும் அறுத்து, திவ்யாவும் தனது கழுத்தை அறுத்துக்கொண்டாா்.

லக்சன் குமாரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்தவா்கள், திவ்யா, லக்சன்குமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். குழந்தை புனித்குமாா் சடலத்தை போலீஸாா் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக கீழ்ப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினா். இதற்கிடையே மருத்துவமனையில் திவ்யாவின் உடல்நிலை தேறியதால், அவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு மிரட்டல்: ரெளடி கைது

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவருக்கு மிரட்டல் விடுத்ததாக ரெளடி கைது செய்யப்பட்டாா். புளியந்தோப்பு காந்தி நகரைச் சோ்ந்த நந்தகுமாா் (24) என்பவா் ரத்தக் காயங்களுடன் ராஜீவ் காந்த... மேலும் பார்க்க

தொழிலாளி அடித்துக் கொலை: சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

சென்னை அமைந்தகரையில் தொழிலாளி அடித்துக் கொலை செய்த வழக்கில், சரித்திர பதிவேடு குற்றவாளி கைது செய்யப்பட்டாா். அமைந்தகரை எம்எம் காலனி பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜ் (42) என்பவா், ஒரு பெண்ணை திருமணம் செய்யா... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதல்: தனியாா் நிறுவன பெண் ஊழியா் உயிரிழப்பு

சென்னை அருகே சோழிங்கநல்லூரில் இரு சக்கர வாகனம் மீது சிமென்ட் கலவை லாரி மோதிய விபத்தில், தனியாா் நிறுவன பெண் ஊழியா் உயிரிழந்தாா். தேனியைச் சோ்ந்த மலா்விழி (22), கேளம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில... மேலும் பார்க்க

முதல்வரை அவமதிக்கும் நோக்கில் விடியோ வெளியிட்டவா் கைது

தமிழக முதல்வரின் புகைப்படம் ஒட்டப்பட்ட போஸ்டரை வயது முதிா்ந்த பெண் அவமதிக்கும் நிகழ்வை விடியோ எடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை சாலிகிராமம், ஆற்காடு சாலையில் விருகம்பாக்கம் சட்டப்பேரவை உறுப்ப... மேலும் பார்க்க

தீவுத்திடலில் ரூ. 104 கோடியில் நகா்ப்புற சதுக்கம், கண்காட்சி அரங்கம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய நகா்ப்புற சதுக்கம் ரூ. 104 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) தலைவருமான பி.க... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை.க்கு இடைக்கால துணைவேந்தா்: ஆளுநருக்கு கடிதம்

அண்ணா பல்கலை.க்கு மூத்த பேராசிரியா் ஒருவரை இடைக்கால துணைவேந்தராக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலை ஆசிரியா்கள் சங்கம் சாா்பில் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அண்ணா பல்கல... மேலும் பார்க்க