செய்திகள் :

ஒருநாள் கிரிக்கெட்டின் ஆசான் விராட் கோலி..! வாட்சன் புகழாரம்!

post image

சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலி கம்பேக் தருவாரென முன்னாள் ஆஸி. வீரர் வாட்சன் பேட்டியளித்துள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் விராட் கோலி சுமாரான ஃபார்மில் விளையாடி வருகிறார்.

8 இன்னிங்ஸிலும் ஒரே மாதிரியாக அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்தில் ஆட்டமிழந்து விமர்சனதுக்கு உள்ளாகியுள்ளார்.

2-1 என ஆஸி. முன்னிலையில் உள்ளதால் கடைசி டெஸ்ட்டில் விராட் கோலி, ரோஹித் நீக்கப்படுவாரென பலரும் கூறிவருகிறார்கள்.

பிப்ரவரி 20 ஆம் தேதி இந்திய அணி அதன் முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி பிப்ரவரி 23 ஆம் தேதி துபையில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் வாட்சன் கூறியதாவது:

தற்போதைய மோசமான ஃபார்மில் இருக்கும் ரோஹித் சர்மா, கோலிக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் அதன் தாக்கம் இருக்குமென நான் நினைக்கவில்லை.

ஒருநாள் கிரிக்கெட்டின் ஆசான்

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் துபையில் நடைபெறுவதால் முற்றிலும் வித்தியாசமான சூழ்நிலையாக இருக்கும். இது இருவருக்கும் பேட்டிங்கை மேலும் இலகுவாக்கும் என நினைக்கிறேன்.

ஒருநாள் கிரிக்கெட்டின் ஆசானாக விராட் கோலி இருக்கிறார். ஆமாம், அவர் எல்லா விதமான கிரிக்கெட்டிலும் மாஸ்டர்தான். ஆனால், குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடியுள்ளார். சராசரி 57க்கும் அதிகமாக 93 ஸ்டிரைக் ரேட்டுடன் நீண்ட காலமாக விளையாடியுள்ளார்.

நீண்ட நாள்கள் இப்படி ஆடுவது மிகவும் பெரிய விஷயம். அதை நாம் மீண்டும் சாம்பியன்ஸ் டிராபியில் பார்ப்போம். 2023 உலகக் கோப்பையில் ரோஹித்தைப் பார்த்தோம். அவர் சிறப்பான நிலையில் இருக்கும்போது ஆட்டத்தை தனியாக கொண்டு செல்வார்.

ஒருநாள் கிரிக்கெட்டினை உயிர்ப்புடன் வைக்கும் சாம்பியன்ஸ் டிராபி

இந்தியா பாகிஸ்தான் செல்லாதது துரதிஷ்டமானது. ஐசிசி போட்டிகளில் இந்தியா - பாகிஸ்தான் என்றாலே மிக முக்கியமானதாக இருக்கும்.

எப்படியானாலும் டி20, டெஸ்ட் ஆதிக்கம் மிகுந்த காலங்களில் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட்டினை உயிருடன் வைத்திருக்கிறது என்றார்.

விராட் கோலி 295 ஒருநாள் போட்டிகளில் விளையாடி13,906 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 58.18 ஆக இருக்கிறது. இதில் 50 சதங்கள், 72 அரைசதங்கள் அடங்கும்.

சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராவதை டி20 தொடர் பாதிக்காது: ஜோஸ் பட்லர்

டி20 போட்டிகளில் விளையாடுவது இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராவதைப் பாதிக்காது என அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா சாம்பியன்!

மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.இலங்கையில் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி முதல் தொடங்கிய மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறாததில் வருத்தமில்லை: சூர்யகுமார் யாதவ்

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறாதது வருத்தமளிக்கவில்லை என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கவுள்ளது. போட்டிகள் பாகிஸ்தான் ... மேலும் பார்க்க

ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து அஸ்வின் கருத்து!

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கவுள்ளது. ... மேலும் பார்க்க

மகன் தந்தைக்காற்றும் உதவி..! தந்தைக்கு ஸ்போர்ட்ஸ் பைக்கை பரிசளித்த ரிங்கு சிங்!

இந்திய கிரிக்கெட்டர் ரிங்கு சிங் தனது தந்தை கான்சந்திர சிங்குக்கு ஸ்போர்ட்ஸ் பைக்கை பரிசளித்தார். அந்த பைக்கை அவரது தந்தை ஓட்டிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரிங்கு சிங் தனது தந்தை கான்ச... மேலும் பார்க்க

முதல் டி20: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நாளை (ஜனவரி 22) முதல் தொடங்குகிறது. ... மேலும் பார்க்க