"வள்ளுவரையும், வள்ளலாரையும் கபளிகரம் செய்ய ஒரு கூட்டம் திட்டம் தீட்டி வருகிறது" ...
4 மணி நேர போராட்டம்..! ஆஸி. ஓபன் காலிறுதியில் அல்கராஸை வீழ்த்திய ஜோகோவிச்!
ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரா்களான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் காலிறுதிச்சுற்றில் மோதினர்.
முதல் செட்டில் 4-6 என அல்கராஸ் வெல்ல அடுத்த 2 சுற்றுகளில் ஜோகோவிச் அதிரடியாக 6-4, 6-3 என வென்றார்.
நான்காவது செட்டில் முதலில் ஜோகோவிச் முன்னிலை வகிக்க அடுத்ததாக அல்கராஸ் முன்னேறி வந்தார். பின்னர் ஜோகோவிச் ஆதிக்கம் செலுத்தி 6-4 என 4ஆவது செட்டை கைப்பற்றினார்.
3 மணி நேரம் 37 நிமிஷங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜோகோவிச் 3-1 என்ற செட்களில் அபாரமாக வென்றார்.
அல்கராஸ் - ஜோகோவிச் சந்தித்துக்கொள்வது இது 8-ஆவது முறையாகும். 8 ஆட்டங்களில் ஜோகோவிச் 5 வெற்றிகளுடன் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவா்கள் ஆஸ்திரேலிய ஓபனில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
கடைசியாக, கடந்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் அல்கராஸை வீழ்த்தி ஜோகோவிச் தங்கம் வென்றது நினைவுகூரத்தக்கது.
இது ஜோகோவிச்சின் 12ஆவது ஆஸி. அரையிறுதி, 50ஆவது கிராண்ட்ஸ்லாம் அரையிறுதி என்பது குறிப்பிடத்தக்கது.