செய்திகள் :

Kantara Chapter 1: படக்குழு மீது கிராம மக்கள் புகார்; அமைச்சர் போட்ட உத்தரவு; பின்னணி என்ன?

post image

கடந்த 2022 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் பரவலாகப் பேசப்பட்ட திரைப்படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய இந்த திரைப்படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, இதன் ப்ரீக்குவலாக 'காந்தாரா அத்தியாயம் 1' உருவாகி வருகிறது.

கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம் சக்லேஷ்பூர் தாலுகாவில் உள்ள காவி பெட்டா வனப்பகுதியில் காந்தாரா அத்தியாயம் 1 படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த படப்பிடிப்பின்போது படக்குழு சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து கர்நாடகா வனத்துறை அமைச்சர் ஈஷ்வர் காந்த்ரே, முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையெனில் படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிடுமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.

ரிஷப் ஷெட்டி
ரிஷப் ஷெட்டி

காவி பெட்டா வனப்பகுதி அருகே படப்பிடிப்பு நடத்த காந்தாரா படக்குழுவினருக்கு நிபந்தனைகளுடன் 23 நாட்கள் அனுமதி வழங்கியுள்ளார் ஹாசன் உதவி வனப் பாதுகாவலர்.

படப்பிடிப்பின்போது காந்தாரா படக்குழுவினர் அதிகப்படியாக வெடிமருந்துகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. உள்ளூர் மக்கள் சூழலியல் காரணங்களை முன்வைத்து வெடிமருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது எனப் புகார் அளித்துள்ளனர்.

எனினும், மீண்டும் மீண்டும் வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஏசலூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்குப் பதிலளித்த அமைச்சர் காந்த்ரே, "புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தை அதிகாரிகள் பார்வையிடக் கோரியிருக்கிறேன். அவர்கள் (படக்குழு) நிபந்தனைகளை மீறியிருந்தால் உடனடியாகப் படப்பிடிப்பை நிறுத்தவும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளேன்" எனக் கூறியுள்ளார்.

'காந்தாரா எ லெஜண்ட் அத்தியாயம் 1' (Kantara The Legend Chapter 1) திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டி, சப்தமி கௌடா, ஜெயராம், கிஷோர், பிரமோத், அச்யுத் குமார் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படம் 2025 அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Balloons Festival: களைகட்டிய சர்வதேச பலூன் திருவிழா; வானில் பறக்கும் ராட்சத பலூன்கள்.. | Photo Album

சர்வதேச பலூன் திருவிழா (Balloons Festival 2025)சர்வதேச பலூன் திருவிழா (Balloons Festival 2025)சர்வதேச பலூன் திருவிழா (Balloons Festival 2025)சர்வதேச பலூன் திருவிழா (Balloons Festival 2025)சர்வதேச பலூன... மேலும் பார்க்க

Shivarajkumar: `நான் நலமாக இருக்கிறேன்!'- புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு சிவராஜ்குமார் உருக்கம்

புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த சிவராஜ்குமார் தான் நலமுடன் இருப்பதாக வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.கன்னட நடிகர் சிவராஜ்குமார் புற்றுநோய் சிகிச்சைக்காக கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க... மேலும் பார்க்க