A.R. Rahman: `ஆழமாக நேசித்த போதிலும்...' - ஏ.ஆர். ரஹ்மானுடனான விவகாரத்து முடிவை ...
``ஒரு நாளைக்கு 100 சிகரெட்; மூச்சுத் திணறல்..." - ரசிகர்களிடம் ஷாருக் பகிர்ந்த தகவல் என்ன?
பாலிவுட் திரைத்துறையின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக் கான்.
நவம்பர் 2 ஆம் தேதி தனது 52 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அன்றைய தினம் தனது ரசிகர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்திருந்தார். அப்போது ரசிகர்களிடம் பேசிய ஷாருக் கான், ஒரு நல்ல செய்தி இருப்பதாகக் கூறி புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டதாக அறிவித்திருக்கிறார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "ஒரு நல்ல விஷயம் இருக்கிறது, நான் இனி புகைபிடிக்க மாட்டேன். புகைபிடிப்பதைக் கைவிட்ட பிறகு மூச்சுத்திணறல் குறைவாக இருக்கும், மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்படாது என்று நினைத்தேன், ஆனால் அந்த உணர்வு இன்னும் இருக்கிறது. கடவுள் அருளால் அதுவும் சரியாகிவிடும்." என்று தெரிவித்திருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த ஷாருக் கான், " ஒரு நாளைக்கு 100 சிகரெட் பிடிப்பேன். நான் ஒரு நாளைக்கு 100 சிகரெட்டுகள் புகைப்பேன். சாப்பிட மறந்து விடுவேன்.
தண்ணீர்கூட குடிக்க மாட்டேன். ஒரு சிக்ஸ் பேக் வைத்திருக்கிறேன். நான் எவ்வளவு குறைவாக என்னைக் கவனித்துக்கொள்கிறேனோ, அதைவிட அதிகமாக மீண்டும் கவனித்துகொள்ளவேண்டியது இருக்கிறது” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...