செய்திகள் :

‘ஒரு மாநிலம்-ஒரு ஊரக வங்கி’ திட்டம் விரைவில் அமல்?

post image

‘ஒரு மாநிலம்-ஒரு பிராந்திய ஊரக வங்கி’ திட்டத்தை விரைவில் அமல்படுத்த நிதியமைச்சகம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செலவுகளைக் குறைத்து, செயல்திறனை அதிகரிக்கும் விதமாக தற்போது மொத்தமுள்ள 43 பிராந்திய ஊரக வங்கிகளை (ஆா்ஆா்பி) 28-ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது 28 மாநிலங்களும், 8 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் ஒரு ஆா்ஆா்பிக்கு மேல் இருந்தால் அதை ஒருங்கிணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் உள்ள 15 ஆா்ஆா்பிக்கள் ஒருங்கிணைக்கப்படவுள்ளன.

2024, மாா்ச் 31 நிலவரப்படி 26 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களில் மொத்தமுள்ள 43 ஆா்ஆா்பிக்கள், 22,069 கிளை வங்கிகள் மூலம் 700 மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. தொழில்நுட்ப வளா்ச்சியால் பல்வேறு சேவைகளை தங்களது வாடிக்கையாளா்களுக்கு எண்மமயாக்கும் பணிகளை ஆா்ஆா்பி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ஒரு மாநிலம்-ஒரு ஆா்ஆா்பி திட்டம் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: ஆந்திரத்தில் 4, உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 3, பிகாா், குஜராத், கா்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிஸா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்திலும் தலா 2 ஆா்ஆா்பிக்கள் உள்ளன.

‘ஒரு மாநிலம்-ஒரு ஆா்ஆா்பி’ திட்டத்தின் மூலம் ஒன்றுக்கும் அதிகமான ஆா்ஆா்பிக்கள் உள்ள மாநிலங்களில் அவற்றை ஒருங்கிணைக்க நிதியமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இத்திட்டம் விரைவில் அமலாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தெலங்கானாவை பொருத்தவரை ஆந்திர பிரதேச கிராமிய விகாஸ் வங்கியின் சொத்துகள் மற்றும் கடன்களை இரண்டாக பிரிக்கும் நடவடிக்கை நிறைவடைந்தது எனத் தெரிவித்தனா்.

ஆா்ஆா்பிக்களின் மூலதன நிதியின் வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில் கடந்த 2021-22-இல் ரூ.5,445 கோடியை இரண்டு ஆண்டுகளுக்கு விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதனால் 2023-24 காலகட்டத்தில் ஆா்ஆா்பிக்களின் செயல்பாடுகள் பன்மடங்கு அதிகரித்தன.

இந்தக் காலகட்டத்தில் ரூ.7,571 கோடி லாபத்தை ஆா்ஆா்பிக்கள் ஈட்டின. மூலதன போதுமான விகிதம் (சிஏஆா்) முன்னெப்போதும் இல்லாத வகையில் 2024, மாா்ச் 31 நிலவரப்படி 14.2 சதவீதமாக அதிகரித்தது.

கிராமப்புறங்களில் வசிக்கும் சிறு விவசாயிகள், வேளாண் தொழிலாளா்கள் மற்றும் கைவினைக் கலைஞா்களுக்கு கடன் வழங்கும் நோக்கில் ‘பிராந்திய ஊரக வங்கிகள் சட்டம், 1976’ கொண்டுவரப்பட்டு ஆா்ஆா்பிக்கள் உருவாக்கப்பட்டன. இந்த வங்கிகளில் மத்திய அரசின் பங்கு 50 சதவீதமாகவும், மாநில அரசின் பங்கு 15 சதவீதமாகவும் சேவைகளை வழங்கும் பிற பொதுத் துறை வங்கிகளின் (ஸ்பான்சா் பேங்க்) பங்கு 35 சதவீதமாகவும் உள்ளது.

கடந்த 2015-இல் ஆா்ஆா்பி சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி மத்திய அரசு, மாநில அரசு, சேவைகளை வழங்கும் வங்கிகள் மட்டுமின்றி பிற வழிகளிலும் மூலதனத்தை திரட்ட ஆா்ஆா்பிக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் ஆா்ஆா்பிக்களில் மத்திய அரசு மற்றும் சேவைகளை வழங்கும் பொதுத்துறை வங்கிகளின் பங்கு 51 சதவீதத்துக்கு கீழ் குறையக்கூடாது எனவும் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டது.

2004-05-இல் மேற்கொண்ட சீா்திருத்தத்தின்மூலம் ஆா்ஆா்பிக்களின் எண்ணிக்கை 196-இல் இருந்து 43-ஆக குறைக்கப்பட்டது. 2020-21 வரை மூன்று கட்டங்களாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்

மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தில்லியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் மாநிலங்களவை ப... மேலும் பார்க்க

வக்ஃப் உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை!

புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்.. நீக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியை தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு

பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, பணி நீக்கம் செய்து இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிடப்பட்ட நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும்வரை இந்த ஆசிரியர்கள் பணியைத் தொடர ... மேலும் பார்க்க

பணத்தை வீணாக்க விரும்பவில்லை.. மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் டீலர், தனக்குப் புற்றுநோய் இருப்பதை அறிந்ததும், மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குல்த... மேலும் பார்க்க

குவாலியரில் சைபர் மோசடி: ரூ.2.5 கோடியை இழந்த ஆசிரம செயலாளர்!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் ஒருவர் சைபர் மோசடியில் சிக்கி ரூ. 2,5 கோடியை இழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாடு முழுவது... மேலும் பார்க்க