செய்திகள் :

`ஒரே நாளில் 6% வீழ்ச்சி' கடும் சரிவில் தங்கம் விலை - என்ன காரணம்? இன்னும் குறையுமா?

post image

தங்கம் விலை கற்பனைக்குக் கூட எட்டாத... ஜெட் வேகத்தைத் தாண்டி தொடர்ந்து அதிகரித்து வந்தது. வெள்ளி விலையும் அப்படித்தான்.

இந்த நிலையில், நேற்று சர்வதேச சந்தையில், தங்கம் விலை கடும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

நேற்று முன்தினம் (அக்டோபர் 20), சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,357.79 டாலர்களுக்கு வர்த்தகம் ஆகி வந்தது.

தங்கம், வெள்ளி
தங்கம், வெள்ளி

இது கிட்டத்தட்ட 6 சதவிகித சரிந்து 4,124.35 டாலர்கள் என நேற்று வர்த்தகமாகியது. 2013-ம் ஆண்டிற்கு பிறகு, தங்கம் இப்படி ஒரு சரிவைப் பார்ப்பது இதுவே முதல் முறை.

வெள்ளியோ கடந்த 20-ம் தேதி ஒரு அவுன்ஸிற்கு 52.32 டாலர்கள் அளவிற்கு வர்த்தகமாகி வந்தது. நேற்றோ 48.75 டாலர்கள் என சரிந்துவிட்டது. இது கிட்டத்தட்ட 7 சதவிகித சரிவு. இது 2021-ம் ஆண்டுக்கு பிறகான, கடும் வீழ்ச்சி ஆகும்.

இந்தச் சரிவுகளுக்கு காரணம் என்ன?

தங்கம் விலை உயர்வால் முதலீட்டாளர்கள் பலர் தங்கத்தை விற்று ஃபிராஃபிட் டேக்கிங் பார்த்தனர்.

தற்போது அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெற்றுள்ளது.

உலக அளவில், வர்த்தகங்கள் மற்றும் போர்கள் சற்று சமூக சூழல்களுக்கு நகர்ந்து வருகிறது.

தங்கம் விலை தற்போது கரெக்‌ஷனைப் பார்க்கிறது.

அமெரிக்கா தங்களது பணவீக்கம் மற்றும் வட்டி விகித தரவுகளை வெளியிட உள்ளது.

இந்தியா

இந்த விலை சரிவு நிச்சயம் இந்திய சந்தைகளிலும் எதிரொலிக்கும். இந்த விலைக் குறைவு தொடரும் என்று கூறமுடியாது. அது சர்வதேச சூழல்களைப் பொறுத்தே அமையும். ஆனால், இன்று தங்கம் விலை குறையும் என்பது உறுதி.

தங்கம் விலை 'இவ்வளவு' குறைஞ்சுடுச்சா? - இன்றைய தங்கம், விலை நிலவரம் என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.300-ம், பவுனுக்கு ரூ.2,400-ம் குறைந்துள்ளது. வெள்ளி விலை ரூ.2 குறைந்துள்ளது.தங்கம்இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.11,700-க்கு விற்பனை ஆகி வருகிறது.தங்கம்இன்று ஒர... மேலும் பார்க்க

அடுத்த 5 ஆண்டுகளில், ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?அதிர்ச்சி வேண்டாம் மக்களே!

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்ந்ந்...து கொண்டே போகிறது. நடுத்தர மக்களுக்கு இது எட்டாக்கனியாக மாறி வருகிறது. இந்த நிலையில், அடுத்த 5-10 ஆண்டுகளில் ஒரு கிராம் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பதை விளக்குகி... மேலும் பார்க்க

ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,080 உயர்வு! இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.260-ம், ஒரு பவுனுக்கு ரூ.2,080-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்துள்ளது. தங்கம்இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,180 ஆக விற்பனை ஆகி வருகிறது. த... மேலும் பார்க்க

Gold Rate: தங்கம் விலை 'இவ்வளவு' குறைவா? இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.250-ம், ஒரு பவுனுக்கு ரூ.2,000-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை ரூ.13 குறைந்துள்ளது.தங்கம்இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,950 ஆக விற்பனை ஆகி வருகிறது. தங்கம்... மேலும் பார்க்க

ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,400 உயர்வு; 1 பவுன் தங்கம் விலை ரூ.97,000-த்தை தாண்டியது - புதிய உச்சம்!

தங்கம்இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.300-ம், ஒரு பவுனுக்கு ரூ.2,400-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை ரூ.3 குறைந்துள்ளது. தங்கம் விலை முதன்முறையாக ரூ.12,000-த்தைத் காட்டியுள்ளது.தங்கம்இன்று ஒரு... மேலும் பார்க்க

'பங்குச்சந்தையில் இல்லாத லாபம் தங்கம், வெள்ளி முதலீட்டில் கிடைத்துள்ளது!' - ஏன்? எவ்வளவு?

தொடர்ந்து தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வருகிறது. வெள்ளியின் வளர்ச்சி விகிதம் தங்கத்தின் வளர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் தங்கம், வெள்ளி விலை வளர்ச்சி குறித்து பேசுகிறா... மேலும் பார்க்க