செய்திகள் :

ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவிற்கு சாதகமாக அமையும்: கம்மின்ஸ்

post image

ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவிற்கு சாதகமாக அமையும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 போட்டி பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று ஆடாததால், ஹைபிரிட் முறையில் துபையில் இந்திய ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுடன் துபையில் நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றிபெற்றது.

இந்தியாவின் அடுத்த ஆட்டம் வருகிற ஞாயிறன்று (மார்ச் 2) நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும். நியூசிலாந்து அணி இதுவரை வங்கதேசம், பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியாவுடன் புள்ளிப்பட்டியலில் சமமாக உள்ளனர்.

காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாட முடியாத நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இதுகுறித்து பேசியதாவது:

”இவ்வாறு போட்டி தொடர்வது நல்லது என்றே நான் நினைக்கிறேன். ஆனால், ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகமாக அமையும். அவர்கள் ஏற்கனவே வலுவான அணியாக உள்ளனர். அத்துடன், அனைத்துப் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் ஆடுவது அவர்களுக்கு கூடுதலாக பலனளிக்கும்” என்றார்.

மேலும், ”வீட்டில் இருந்து எல்லாவற்றையும் பார்ப்பது நன்றாக இருக்கின்றது. கணுக்கால் காயம் குணமாகி வருகின்றது. இந்த வாரம் மீண்டும் ஓட்டப் பயிற்சி மற்றும் பந்துவீச்சைத் தொடங்கவுள்ளேன்” என்று கம்மின்ஸ் கூறினார்.

இதையும் படிக்க | வங்கதேசத்தை வீழ்த்திய நியூசிலாந்து; அரையிறுதிக்கு நியூசி., இந்தியா முன்னேற்றம்!

இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய பார்டர் கவாஸ்கர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் சிட்னி டெஸ்ட்டின்போது கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்டார். மேலும், தனக்கு குழந்தை பிறக்கவிருந்ததால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி தொடரில் அவரால் பங்கேற்க முடியவில்லை. அதன் தொடர்ச்சியாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்தும் பாட் கம்மின்ஸ் முழுமையாக விலகினார்.

இந்த நிலையில் மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அணியில் இணைவேன் என்று பாட் கம்மின்ஸ் தெரிவித்திருந்தார். 

இந்திய அணிக்கு சுயதிருப்தி தேவையில்லை..! பிசிசிஐ செயலாளர் பேட்டி!

இந்திய அணி பெரிய போட்டிகளுக்காக தயாராக இருக்க வேண்டுமென பிசிசிஐ செயலாளர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருந்த ஜெய் ஷா, தற்போது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்... மேலும் பார்க்க

சர்வதேச கிரிக்கெட்டில் மிகப் பெரிய வீரராக உருவெடுக்கும் ஷுப்மன் கில்: ஹாசிம் ஆம்லா

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஷுப்மன் கில் மிகப் பெரிய வீரராக உருவெடுக்க உள்ளதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஹாசிம் ஆம்லா தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப... மேலும் பார்க்க

திடலில் அத்துமீறி நுழைந்தவருக்கு வாழ்நாள் தடை..! பாதுகாப்பை பலப்படுத்தும் பாகிஸ்தான்!

ராவல்பிண்டி திடலில் அத்துமீறி நுழைந்த நபரால் சாம்பியன்ஸ் டிராபியில் பாதுகாப்பை பலப்படுத்த பிசிபி முடிவெடுத்துள்ளது.சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) நடத்துகின்றன. நடப... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர்!

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு உதவிப் பயிற்சியாளரை அந்த அணி நிர்வாகம் இன்று (பிப்ரவரி 25) நியமித்துள்ளது.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: ஆஸி.-தெ.ஆ. போட்டி ரத்து!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸி. தெ.ஆ. போட்டி மழையினால் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் நடைபெறவிருந்த 7ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணி... மேலும் பார்க்க

ஆஸி. - தெ.ஆ. போட்டி ரத்தானால் அரையிறுதிக்கு தகுதிபெறுவதில் சிக்கல்!

சாம்பியன்ஸ் டிராபியில் மழையின் காரணமாக ஆஸி.-தெ.ஆ. ஆட்டம் தொடங்கபடவில்லை என்பதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ஆஸ... மேலும் பார்க்க