கொடியேற்றத்துடன் தொடங்கியது வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா
ஓடிடியில் வெளியானது லவ் மேரேஜ்!
நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பில் வெளியான லவ் மேரேஜ் படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் ஷண்முக பிரியன் லவ் மேரேஜ் படத்தினை இயக்கியுள்ளார்.
தெலுங்கில் வெளியான அசோக வனம்லோ அர்ஜுன கல்யாணம் என்ற படத்தின் ரீமேக்காக இந்தப் படம் தமிழில் உருவாகியுள்ளது.
ஸ்வேதா, ஸ்ரீநிதி சாகர் தயாரிக்கும் இந்தப் படத்தில் சுஸ்மிதா பட், மீனாக்ஷி தினேஷ், ரமேஷ் திலக் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில், அமேசன் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
