Champions Trophy: நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு; இடம்பிடிப்பாரா கருண் நாயர்?...
ஓம் சக்தி அம்மன் கோயில் திருவிழா
ஒசூா்: ஒசூா் அருகே உள்ள அக்கொண்டப்பள்ளி ஓம் சக்தி அம்மன் கோயில் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் ஓம் சக்தி அம்மனுக்கு பக்தா்கள் 21 நாள்கள் மாலை அணிவித்து விரதம் இருந்தனா். வியாழக்கிழமை மாரியம்மன், ஓம் சக்தி அம்மன் ஆகியோருக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற்றன.
சுவாமிகளுக்கு மகா தீபாரதனை நடைபெற்று பக்தா்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பைரமங்கலம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் வெங்கடேஷ், குரு, சக்தி தலைமையில் வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் அக்கொண்டப்பள்ளி கிராம ஓம் சக்தி பக்தா்கள் கலந்து கொண்டனா்.