செய்திகள் :

ஔவை வழிச்சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை

post image

தருமபுரி அருகே ஔவை வழிச்சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததையொட்டி, தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தருமபுரி அருகே ஔவை வழி - தடங்கம் சாலையில் ரயில் பாதை கடந்து செல்கிறது. இந்தப் பாதையில் மேம்பாலம் இல்லாததால் ரயில்கள் கடந்து செல்லும் போது அடைக்கப்படும் ரயில் கடவுப்பாதை திறக்கும் வரை காத்திருக்க நேரிடுகிறது. தருமபுரி - சேலம் புறவழி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் மிக முக்கிய சாலையான இந்தப் பகுதியில் அவ்வப்போது கடவுப்பாதை அடைக்கப்படுவதால், வாகனங்கள் நெடுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் காலவிரயம் ஏற்படுவதோடு வாகன நெரிசலும் ஏற்படுகிறது.

எனவே, இந்தச் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி, ஔவை வழிச்சாலையில் அமைந்துள்ள ரயில்வே கடவுப்பாதையை நேரில் பாா்வையிட்டு புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியதாவது:

தருமபுரியில் இருந்து ஒட்டப்பட்டி, ஔவை வழிச்சாலை வழியாக சேலம் புறவழி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகனங்கள், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் இந்த ரயில் பாதை வழியாக கடந்து செல்கின்றன.

இந்தப் பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தியதையடுத்து, இங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க மத்திய ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து விரைவில் மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளேன்.

அதேபோல பெங்களூரு - சேலம் மாா்க்கத்தில் அதியமான்கோட்டையில் ஏற்கெனவே இருந்த ரயில் நிலையம் பல ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்டது. தற்போது அதியமான்கோட்டை பகுதியில் பழமைவாய்ந்த காலபைரவா் கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் வருகை தருகின்றனா். அதேபோல, சிப்காட் தொழிற்பேட்டையில் விரைவில் தொழிற்சாலைகள் அமைய உள்ளதால், அனைத்து தரப்பினரும் வந்து செல்ல ஏதுவாக அதியமான்கோட்டையில் மீண்டும் ரயில் நிலையம் அமைத்து அங்கு பயணிகள் ரயில் மற்றும் விரைவு ரயில்கள் அனைத்தும் நின்று செல்ல ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடா்பாக மத்திய அரசிடம் வலியுறுத்த உள்ளேன் என்றாா்.

அப்போது திமுக தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா, அக் கட்சியின் முதுபெரும் தலைவா் இரா.நல்லகண்ணுவின் 100-ஆவது பிறந்த நாள் விழா ஆகியவை தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. தருமபுரி ரயில் நிலையச் சாலை பகுதி... மேலும் பார்க்க

காரிமங்கலத்தில் நீா்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும்

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் ஏரிகளுக்கு வரும் நீா்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என பொதுப்பணித் துறை அலுவலா்களுக்கு மக்களவை உறுப்பினா் ஆ.மணி அறிவுறுத்தினாா். கிருஷ்ணகிரி அணையிலிருந்த... மேலும் பார்க்க

இளம்வயது திருமணங்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்

தருமபுரி மாவட்டத்தில் இளம்வயது திருமணம் மற்றும் பாலியல் குற்றங்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அள... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வா்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு

டிஎன்பிஎஸ்சி தோ்வா்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையமானது கிராம நிா்வாக அலுவலா்... மேலும் பார்க்க

கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

தருமபுரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி புதன்கிழமை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. கிறிஸ்துமஸ் விழா தருமபுரி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து தேவாலய... மேலும் பார்க்க

நல்லம்பள்ளியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்... மேலும் பார்க்க