செய்திகள் :

``கங்கையில் நீராடினால் வறுமை நீங்கிடுமா?" - அமித் ஷாவை சாடிய கார்கே; பாஜக-வின் ரியாக்சன் என்ன?

post image
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு கங்கையில் புனித நீராடியதைத் தொடர்த்து, ``கங்கையில் நீராடினால் வறுமை நீங்கிடுமா?" என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் செய்திருப்பது பா.ஜ.க-விடமிருந்து கடும் விமர்சனத்தைத் தூண்டியிருக்கிறது.

முன்னதாக, மகா கும்பமேளாவை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநிலம், பிராகியராஜில் இன்று நடைபெற்ற ஆன்மிக விழாவில், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் கலந்துகொண்ட அமித் ஷா, கங்கையில் நீராடினார். அதைத் தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் அமித் ஷா, ``புனிதமான திரிவேணி சங்கமத்தில் சமூக நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்தின் அடையாளமான 'மகா கும்பமேளாவில்', துறவிகள் முன்னிலையில் நீராடியதில் மனம் நிரம்பி வழிகிறது. அனைவரின் நலனுக்காகவும் கங்கா, யமுனா, சரஸ்வதி மாதாவைப் பிரார்த்திக்கிறேன்." என்று பதிவிட்டிருந்தார்.

அமித் ஷா

மறுபக்கம், மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ``கங்கையில் நீராடினால் வறுமை நீங்கிடுமா? அது உங்கள் வயிற்றை நிரப்பிடுமா? யாருடைய நம்பிக்கையையும் நான் கேள்விக்குட்படுத்த நான் விரும்பவில்லை. யாரேனும் மனது புண்பட்டால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

ஆனால், பசியால் குழந்தைகள் சாகும்போதும், பள்ளிக்குச் செல்ல முடியாதபோதும், தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தைப் பெறமுடியாதபோதும், பாஜக தலைவர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு கங்கையில் நீராடுகிறார்கள். இதுபோன்றவர்களால், நாடு எந்தப் பலனும் அடையாது. 100 முறை பிறந்தாலும் சொர்க்கத்துக்குச் செல்ல முடியாத அளவுக்குப் பாவங்களைச் செய்திருக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வினர் துரோகிகள். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றிலிருந்து நீங்கள் விடுபட விரும்பினால், அரசியலமைப்பைப் பாதுகாத்து ஒற்றுமையாக இருங்கள்." என்று கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

மல்லிகார்ஜுன கார்கே

கார்கேவின் இத்தகையப் பேச்சுக்கு கடுமையாக எதிர்வினையாற்றிய பா.ஜ.க எம்.பி சம்பித் பத்ரா, ``இது கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையின் மீதான தாக்குதல். கார்கே கூறியதைக் கேட்டு கோடிக்கணக்கான மக்கள் வேதனையடைந்திருக்கின்றனர். கங்கையில் நீராடினால் வறுமை நீங்குமா, மக்களுக்கு வேலை கிடைக்குமா என்று கேட்கிறார்கள்... இதையே, கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் வேறு எந்த மதத்தினருக்கும் கூற முடியுமா? சனாதன தர்மத்திற்கு எதிரான இது போன்ற அறிக்கைகள் வெட்கக்கேடானது. சனாதன தர்மத்தின் மீதும், ஒட்டுமொத்த தேசத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் ஒவ்வொருவரிடமும் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும்." என்றார்.

Seeman: ``சிங்கள அரசு ஈழத்தில் செய்ததை சீமான் தமிழ்நாட்டில் செய்கிறார்' - ஈழத்தமிழர் சபேசன் பேட்டி

சமீபகாலமாக தமிழகத்தில் பெரியார் குறித்த உரையாடல் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஈழத்தமிழர் vs பெரியார் என்று உரையாடல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க பெரியாரை ஈழத்தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும்... மேலும் பார்க்க

கழுகார்: `தவெக: மோதல்கள்... பேரங்கள்... குழப்படிகள் டு பசைப்பழக்கம்; புலம்பலில் குக்கர் விரும்பிகள்’

சட்டை செய்யாத நிர்வாகிகள்!பிடியை இழந்த மாஜி...“மான்செஸ்டர் மாவட்டத்தில், இலைக் கட்சி மாஜி செய்த திருவிளையாடலால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. இதனால், மாவட்டக்... மேலும் பார்க்க

'ஒருவர் வளைந்து கொடுத்தே பழகி விட்டார்; மற்றொருவர் சாட்டையால் அடித்துக்கொள்கிறார்' - கனிமொழி சாடல்

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் திராவிட மாடல் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்ட நிகழ்வில் எம்பி கனிமொழி கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் பேசிய ... மேலும் பார்க்க

`வேங்கைவயல் பிரச்னையில் பழனிசாமி ஏன் போராடவில்லை?’ - கேள்வி எழுப்பும் தொல்.திருமாவளவன்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஆதிதிராவிடர் நலப்பேரவையின் சார்பில் நடைபெறும் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பர நாடாளுமன... மேலும் பார்க்க

`பெரியார் இல்லாமல் நமக்கு அரசியல் இல்லை!’ – சீமான் கருத்துக்கு இயக்குநர் பார்த்திபன் பதில்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீப நாட்களாக பொது வெளியில் பெரியார் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். அதற்கு பெரியாரிஸ்டுகளும், பெரியாரிய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு ... மேலும் பார்க்க