செய்திகள் :

மருத்துவ மாணவர் இட ஒதுக்கீடு ரத்துக்கு உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்: மா. சுப்பிரமணியன்

post image

மருத்துவப் படிப்பிற்கான மாணவர் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் பேசியதாவது:

மருத்துவ மாணவர் இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பு செயல்படுத்தப்பட்டால், மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படுவதுடன், மாநிலத்தின் உள் இட ஒதுக்கீடுகள் பாதிக்கப்படும்.

இந்த தீர்ப்பில் அதாவது, எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவ நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த ஒதுக்கீடுகள் செல்லும் என்றும், வசிப்பிடம் ரீதியாக மாநிலத்தில் வாழ்பவர்களுக்கும் பிறந்தவர்களுக்கும் குறிப்பிட்ட எந்த ஒதுக்கீடும் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: காந்தி நினைவு நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு 69 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்டவர்களுக்கும் தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மருத்துவ கட்டமைப்பு அதிகமாக இருக்கின்றது. மேலும் எம்டி, எம்எஸ், எம்டிஎஸ், டிஎம் போன்ற படிப்புகளுக்கான சேர்க்கையும் அதிகமாக உள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, மாநில உரிமைகள் பாதிக்கப்படாமல், இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படவுள்ளது என்று தெரிவித்தார்.

காந்தியின் இறப்பைக் கொண்டாடியது யார்? ஆளுநர் ரவிக்கு காங்கிரஸ் கேள்வி!

காந்தியின் இறப்பைக் கொண்டாடியது யார் என்று ஆளுநர் கூறுவாரா? என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர். செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.மகாத்மா காந்தியின் நிகழ்வுகள... மேலும் பார்க்க

காப்பகத்திலிருந்து காணாமல்போன சிறுவன்! 2 ஆண்டுகள் கழித்து மீட்பு!

புது தில்லியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன சிறுவனை அம்மாநில காவல் துறையினர் தற்போது மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தில்லியிலுள்ள தனியார் தொண்டு நிறுவனத்த... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் ராணுவ மேஜர் உள்பட 2 பேர் பலி!

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் அந்நாட்டின் ராணுவ மேஜர் உள்பட 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தின், ஆப்கானிஸ்தான் நாட்டுடனான எல்லையில் பயங்கரவாதிகள் பது... மேலும் பார்க்க

ஜகபர் அலி உடலைத் தோண்டியெடுத்து ஆய்வு செய்ய உத்தரவு!

சமூக செயற்பாட்டாளர் ஜகபர் அலியின் உடலைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள பகுதிகளில் நடந்து வந்த கனிம வளக் கொள்ளைக்கு எத... மேலும் பார்க்க

அரிட்டாபட்டியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, அண்ணாமலை!

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று மதுரை அரிட்டாபட்டி சென்றுள்ளனர்.மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட கடந்த ஆண்டு நவம்பா் மா... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைப் பார்க்கலாம்.டோவினோ தாமஸ், திரிஷா நடிப்பில் வெளியான மலையாள மொழிப்படமான ஐடென்டிட்டி திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் காணக... மேலும் பார்க்க