செய்திகள் :

மக்கள் நீதி மய்யத்திலிருந்து நடிகை வினோதினி விலகல்!

post image

நடிகையும், சமூக செயற்பாட்டாளருமான வினோதினி, மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று (ஜன.30) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன்.

அரசியல் பெரிய கடல். அதில் முத்தெடுத்து, மக்களுக்குச் சேர்க்க, தனிப்பட்ட நபரால் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்ய தேவை - எண்ணம், சிந்தனை, செயல், பணம். என்னிடம் எண்ணமும் சிந்தனையும் மட்டுமே உள்ளது என்பதைக் காலம் புரியவைத்திருக்கிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் செயலும் பணமும் எனது சொந்த வாழ்க்கைத் தரத்தை ஓரளவு முன்னேற்றுவதற்கும், நான் மேற்கொண்டுள்ள தெருவிலங்குகளின் (நாய், பூனை, ஒரு கோஷாலாவில் என் செலவில் வாழும் சில மாடுகள்) வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்குமே சென்றிருக்கிறது.

ஹிந்தியில் ஒரு வார்த்தை இருக்கிறது. அதை நான் சொல்லிப்பல பேரைத் திட்டியிருக்கிறேன். காம்சோர் என்பதுதான் அந்த வார்த்தை. ஆங்கிலத்தில் சொன்னால் ஸ்லாக்கர்(Slacker). கடமைகளைத்தட்டிக்கழிக்கும் சோம்பேறி. மய்யத்தில் நான் செய்தது காம்சோர். இதை ஒத்துக்கொள்வதில் தவறில்லை என்றும் இந்த உண்மையை வெளிப்படுத்துவதன்மூலம் எனக்கு மிகப்பெரிய சுதந்திரம் கிடைக்கிறது என்றும் நம்புகிறேன்.

பலர் இங்கு, கட்சி நடக்கிறதா என்றெல்லாம் கேட்பார்கள். எப்பொழுதும் நான் சொல்வது - கட்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சிந்தியுங்கள். சிறு துளி கூட பெரு வெள்ளமாகும். அச்சிறு துளியைக்கூட நான் என் பல அலுவல்களுக்கு நடுவில்தான் செய்திருக்கிறேன். முழுமையாக அல்ல.

இதையும் படிக்க | பட்ஜெட்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது!

அமெரிக்க அரசியலில் ஒரு வார்த்தை பயன்பாட்டில் உள்ளது. முழு நேர அரசியல்வாதிகள் (Career Politician). முழுமையாக அரசியலில் மட்டுமே இருப்பவர்கள், அரசியலையே தொழிலாகக் கொண்டவர்கள், அதிலிருந்தே சம்பாதிப்பவர்கள். ஆனால் அதை முறியடித்துத்தான் அத்தனை அரசியல்வாதி தொழில் செய்பவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு டிரம்ப் அதிபரானார். (அவர் அமெரிக்காவிற்கு சரியான தலைவரா இல்லையா என்பது வேறு விஷயம்).

ஆனால் அங்குள்ள மக்களே உணர்ந்தது என்னவென்றால் அரசியல் தொழில் செய்பவர்களைவிட தொழிலபதிரான டிரம்ப் எல்லாவிதத்திலும் மக்களின் நலனுக்காக மக்கள் கஷ்டங்கள் தெரிந்து போராடுவார், ஆனால், அப்படி முழுநேர அரசியல் செய்யாமல் அவ்வரசியலிலிருந்து பொருள் ஈட்டாமல் இருக்க, மக்கள் பணத்தைச் சுருட்டாமல் இருக்க, சொந்தமாகப் பெரிய வணிக அல்லது பொருளாதாரப் பின்புலம் தேவை. அது என்னிடம் இல்லை.

கட்சி எடுத்த பல நிலைப்பாடுகளைக் கேள்வி கேட்டிருக்கிறேன். பெருந்தன்மையோடு எனக்கு புரிய வைத்திருக்கின்றனர். யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்புக்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. தலைவரோடு நேரடியாக உரையாட, கேள்வி கேட்க, பற்பல நிகழ்ச்சிகளைத் துவக்க, பற்பல செயல்பாடுகளை முன்னெடுக்க. ஆனால் அவற்றையெல்லாம் நான் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

கமல்ஹாசன் போன்ற மகத்தான தலைவனைத் தவறவிட்டது தமிழ்நாடு மட்டுமல்ல, வினோதினியும்தான்.

தொடர்ந்து என் எண்ணமும் சிந்தனையும் தமிழ்நாட்டு அரசியலை மையப்படுத்தியே இருக்கும். ஏனெனில், நான் பிறந்த இம்மண்ணுக்கு என் மக்களுக்கு என்னால் ஆன சிறு மாற்றத்தையாவது, குறைந்தபட்சம் சிந்தனையளவிலாவது, இப்பிறவியில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.

65 வயதிற்கு மேலும் தனது மூத்திரப்பையை கையில் ஏந்தி பகுத்தறிவு புகட்டிய அந்த தாத்தனைப்போல், இன்றும் எங்கள் மய்யத்தில் கொடி நட்டு, போஸ்டரடித்து, உறுப்பினர் சேர்த்து, ஒவ்வொரு தேர்தலின்போதும் அயராது களத்தில் இறங்கி வேலைசெய்யும் தொண்டனைப்போல், மக்கள் பிரச்சனை என்றால் களத்தில் குதிக்கும் ஒவ்வொரு கட்சியின் நிர்வாகிபோல் நானும் என் கணக்கைத் தொடங்கும் பொழுதுதான் அது அரசியல் அல்லாது, அறச் செயலாக மாறும்.

அதுவரை, சிந்தனையில் மட்டுமே. அச்சிந்தனையை மெருகேற்றிய கமல் ஹாசனுக்கு அவர்பின் நின்ற, நிற்கும் அனைவருக்கும் நன்றிகளும் அன்பும்.

தொடர்ந்து பயணிப்போம். சமரசமற்ற நடுவு நிலையிலிருந்தபடியே" என்று பதிவிட்டுள்ளார்.

காந்தியின் இறப்பைக் கொண்டாடியது யார்? ஆளுநர் ரவிக்கு காங்கிரஸ் கேள்வி!

காந்தியின் இறப்பைக் கொண்டாடியது யார் என்று ஆளுநர் கூறுவாரா? என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர். செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.மகாத்மா காந்தியின் நிகழ்வுகள... மேலும் பார்க்க

காப்பகத்திலிருந்து காணாமல்போன சிறுவன்! 2 ஆண்டுகள் கழித்து மீட்பு!

புது தில்லியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன சிறுவனை அம்மாநில காவல் துறையினர் தற்போது மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தில்லியிலுள்ள தனியார் தொண்டு நிறுவனத்த... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் ராணுவ மேஜர் உள்பட 2 பேர் பலி!

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் அந்நாட்டின் ராணுவ மேஜர் உள்பட 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தின், ஆப்கானிஸ்தான் நாட்டுடனான எல்லையில் பயங்கரவாதிகள் பது... மேலும் பார்க்க

ஜகபர் அலி உடலைத் தோண்டியெடுத்து ஆய்வு செய்ய உத்தரவு!

சமூக செயற்பாட்டாளர் ஜகபர் அலியின் உடலைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள பகுதிகளில் நடந்து வந்த கனிம வளக் கொள்ளைக்கு எத... மேலும் பார்க்க

அரிட்டாபட்டியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, அண்ணாமலை!

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று மதுரை அரிட்டாபட்டி சென்றுள்ளனர்.மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட கடந்த ஆண்டு நவம்பா் மா... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைப் பார்க்கலாம்.டோவினோ தாமஸ், திரிஷா நடிப்பில் வெளியான மலையாள மொழிப்படமான ஐடென்டிட்டி திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் காணக... மேலும் பார்க்க