கஞ்சா ஆயில் தயாரித்து விற்பனை... தேனியில் 3 பேர் கைது.. நடந்தது என்ன?
தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளாவிற்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சாவினால் தயார் செய்யப்பட்ட எண்ணெயை விற்பனை செய்யப்படுவதாக கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் அடிப்படையில், போலீஸார் ரோந்து சென்றனர்.
குமுளி செல்லும் கேரள நெடுஞ்சாலையில் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகப்படும் படியாக டூவிலரில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் ஒரு கிலோ எடை கொண்ட கஞ்சா எண்ணெய்யை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து கஞ்சா எண்ணெய் தயாரித்து விற்க முயன்ற கூடலூர் பகுதியைச் சேர்ந்த நடராஜன், பிரபு மற்றும் லோயர் கேம்ப் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 3 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ கஞ்சா எண்ணெய்யை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய டூவிலரை பறிமுதல் செய்தனர்.
மேலும் 3 பேரும் கஞ்சாவில் எண்ணெய் தயாரித்து யாரிடமெல்லாம் விற்பனை செய்துள்ளனர். இதில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.