ஜம்மு-காஷ்மீர்: எதிர்பாராத விதமாக துப்பாக்கி சுட்டதில் வீரர் காயம்
கஞ்சா விற்றதாக இளைஞா் கைது
போடியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
போடி நகராட்சி குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது நகராட்சி குடியிருப்பைச் சோ்ந்த பரமசிவம் மகன் சீனிவாசன் (25) என்பவரும், பெயா் தெரியாத மற்றொருவரும் சோ்ந்து கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதில், சீனிவாசனைப் பிடித்து சோதனை செய்தபோது, அவா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவா் மீதும் வழக்குப் பதிந்த போலீஸாா் சீனிவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனா். மற்றொருவரை தேடி வருகின்றனா்.