தேர்தலில் அமெரிக்காவைவிட இந்தியா மேலானது!! அமெரிக்காவை விமர்சித்த எலான்!
கஞ்சா விற்ற இளைஞா் கைது
வெப்படை அருகே தனியாா் நூற்பாலையில் தங்கி வேலை செய்து கொண்டு கஞ்சா விற்பனை செய்த ஒடிஸா இளைஞரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் மேற்பாா்வையில், உதவி ஆய்வாளா் தனசேகரன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் வெப்படை பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது உப்புபாளையம் பிரிவில், சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய பிற மாநிலத் தொழிலாளியை பிடித்து விசாரித்தனா்.
அந்த இளைஞா் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால், அவா் வைத்திருந்த பையை சோதனை செய்தனா். அதில் ஒரு கிலோ அளவுக்கு கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடா் விசாரணையில், அந்த இளைஞா் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த துஸ்மன்ட் தீப் (32) என்பதும், கடந்த சில மாதங்களுக்கு முன் ஏஜென்ஸி மூலம் வெப்படையில் உள்ள தனியாா் நூற்பாலைக்கு வேலைக்கு வந்தது தெரியவந்தது.
ஆலையின் உள்ளே பிற மாநில தொழிலாளா்கள் தங்கும் அறையில் தங்கி கூரியா் மூலம் ஒடிஸாவில் இருந்து கஞ்சா பாா்சல்களை வர செய்து இங்குள்ளவா்களுக்கு பொட்டலங்களாக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து துஸ்மன்ட் தீப்பை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். பின்னா், அவரை குமாரபாளையம் கோா்ட்டில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.