விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தொடங்கியது
கடந்த 11 நாள்களில் ஆறாவது முறை: தில்லியில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்!
தில்லியில் உள்ள பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமையான இன்று வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் மூலம் வந்துள்ளன. கடந்த 11 நாள்களில் இதுபோன்ற ஆறாவது முறை இது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களாக தில்லியில் உள்ள பள்ளிகளுக்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்களும், அதைத்தொடர்ந்து பள்ளி முழுவதும் சோதனை மேற்கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த மிரட்டல்கள் விடுப்பவர் யார், எதற்காக இவ்வாறு தொடர்ந்து செய்யவேண்டும் என்று போலீஸாருக்கு புரியாத புதிராகவே உள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று மேலும் சில பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில்,
பாதுகாப்புப் பணியாளர்கள் பள்ளிகளில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர், ஆனால் சந்தேகத்திற்குரிய பொருள்கள் எதுவும் சிக்கவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இன்று காலை 5:02 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக எங்களுக்கு அழைப்பு வந்ததாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு போலீஸார், தீயணைப்புத் துறை, வெடிகுண்டு கண்டறியும் குழுக்கள் மற்றும் நாய்ப் படை ஆகியோர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர், ஆனால் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
துவாரகாவில் உள்ள ஐந்து பள்ளிகளுக்கும் மற்ற மாவட்டங்களில் உள்ள சில பள்ளிகளுக்கும் இதேபோன்ற மின்னஞ்சல்கள் வந்ததாக அந்த அதிகாரி கூறினார்.
சில இடங்களில், மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது.ஒருசில பள்ளிகளுக்கு அச்சுறுத்தலுக்குப் பிறகு ஆன்லைன் வகுப்புகள் வைக்கப்பட்டது என்று அவர் கூறினார்.