செய்திகள் :

கடலூரில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

post image

கடலூர்: கடலூரில் வியாழக்கிழமை ரூ.40 லட்சம் ஹவாலா பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் பேருந்து நிலையப் பகுதியில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு சொகுசு பேருந்து வந்தது. பேருந்தை சோதனையிட்டத்தில் பெரிய அளவிலான பைகளுடன் இருந்த நவீத் அன்வர் என்பவரின் உடைமைகளை காவல்துறையினர் சோதனையிட்ட போது, அதில் ரூ.40 லட்சம் ரொக்கம் இருந்தது தெரிய வந்தது.

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸுக்கு ஓராண்டு தடை: தமிழக அரசு

அவர் வைத்திருந்த பணத்துக்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. மேலும் முரண்பட்ட தகவல்கலைத் தெரிவித்ததால் அவரிடம் இருந்த ரூ.40 லட்சம் பணத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு கொண்டு செல்லப்பட்ட ஹவாலா பணம் எனத் தெரிகிறது.

சென்னையில் அவரிடம் பணத்தைக் கொடுத்தனுப்பிய நபா் யாா், மன்னார்குடியில் பணத்தை வாங்கிச் செல்ல இருந்தவா் யாா், எங்கிருந்து ஹவாலா பணம் அனுப்பப்பட்டது போன்றவை குறித்து வருமான வரித் துறையினா் விசாரணை நடத்துவாா்கள் எனக் கூறப்படுகிறது.

என்எல்சி தொமுச-வை தனிப்பெரும் சங்கமாக உருவாக்கித் தர வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் நடைபெற இருக்கின்ற ரகசிய வாக்கெடுப்பில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தை எண்.6-இல் வாக்களித்துத் தனிப்பெரும் சங்கமாக உருவாக்கித் தர வேண்டும் என திமுக தலைவரும் முதல்வருமான ம... மேலும் பார்க்க

தஞ்சை அரசு மருத்துவமனை மகப்பேறு பச்சிளம் குழந்தை பிரிவில் தீ விபத்து!

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் மகப்பேறு பச்சிளம் குழந்தை பிரிவில் வியாழக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அந்த பிரிவில் இருந்த கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் உடனடியாக வெளி... மேலும் பார்க்க

ஐ.நா. சபையில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும்: மதுரை ஆதீனம் விடியோ

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஐ.நா. பொது சபையில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும் என மதுரை ஆதீனம் விடியோ வெளியிட்டுள்ளார்.மதுரை தெற்கு ஆவணி மூல வீதி பகுதியில் உள்ள ஆதீனம் மடத்திலிருந்து மதுரை ஆதீனம்... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயானிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக சயானிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நீலகிரி மாவட்டம், கொாடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கில் சயான், வாளை... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகள் நடத்திய அதிர்ச்சி காட்சிகள்!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் புல்வெளியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய அதிர்ச்சி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசாா்ட் ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

விசாகப்பட்டினம்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை ஆந்திரம் முதல்வர் சந்திரபாபு நாயுடு ... மேலும் பார்க்க