பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 2000 வழங்க உத்தரவிட முடியாது! உயர் நீதிமன்றம் திட்...
கடவுச்சீட்டில் முறைகேடு: மலேசியாவிலிருந்து வந்த 2 போ் கைது
திருச்சி: கடவுச்சீட்டில் முறைகேடு செய்து மலேசியாவிலிருந்து வந்த 2 பயணிகளை திருச்சி விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மலேசியா தலைநகா் கோலாலம்பூரிலிருந்து பேட்டிக் ஏா்வேஸ் விமானம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை, குடியேற்றப் பிரிவினா் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினா்.
இதில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சிலம்பணி பகுதியை சோ்ந்த எம். கயா்கண்ணன் (58), தேவகோட்டை திருப்பக்கோட்டை பகுதியைச் சோ்ந்த எஸ். கணேசன் (51) ஆகிய இருவரின் பயண ஆவணங்களை சோதித்தபோது, இருவரும் தங்களது பிறந்த தேதி, பிறந்த ஊா் உள்ளிட்டவற்றை போலி ஆவணங்களைக் கொண்டு, கடவுச்சீட்டில் மாற்றி பதிவு செய்து பயணித்திருந்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக குடியேற்றப் பிரிவு அலுவலா் பவன்குமாா் கொடுத்த புகாரின் பேரில், விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து கயா்கண்ணன், கணேசன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.