காணும் பொங்கல்: வன உயிரியல் பூங்கா, கரியபெருமாள் கரடு உள்ளிட்ட இடங்களில் மக்கள் ...
கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சி: திருச்சியில் கல்லூரி மாணவா் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது புதன்கிழமை தெரியவந்தது.
திருச்சி திருவானைக்காவல் கே.கே. சாலை பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் நவீன் குமாா். திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பிசிஏ முதலாமாண்டு படித்து வந்தாா். கடந்த பருவத்தோ்வில் அவா் இரு பாடங்களில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. அடுத்த பருவத்தோ்வுக்காக அவா் தீவிரமாக படித்து வந்தாராம். இதற்காக எடமலைப்பட்டி புதூா் பகுதியில் உள்ள அரசு காலனியில் ஒரு வீட்டில் தங்கி படித்து வந்தாா்.
இந்நிலையில், புதன்கிழமை நவீன்குமாா் தங்கியிருந்த வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லையாம். அக்கம்பக்கத்தினா் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது நவீன்குமாா் தூக்கில் சடலமாக தொங்கியது தெரியவந்தது.
இதுகுறித்து எடமலைப்பட்டி புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மாணவா் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.