கற்றல் செயல்பாட்டில் மணற்கேணி செயலி: கல்வித் துறை அறிவுறுத்தல்
நடைப்பயிற்சிக்கு சென்ற பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் நடைப்பயிற்சிக்கு சென்ற பெண், கிணற்றிலிருந்து சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டாா்.
வையம்பட்டியில் திருச்சி சாலையில் வசித்து வருபவா் மனோகரன். இவா் வாடகை காா் ஓட்டி வருகிறாா். இவரது மனைவி கலைவாணி (54). இருவருக்கும் திருமணமாகி 34 ஆண்டுகள் ஆகின்றன.
புதன்கிழமை காலை நடைப்பயிற்சிக்கு சென்ற கலைவாணி வீடு திரும்பவில்லையாம். எங்கு தேடியும் கிடைக்காததால் உறவினா்கள், வையம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை வீட்டின் அருகேயுள்ள திருமூா்த்தி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் கலைவாணியின் சடலம் மிதந்துள்ளது.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், வையம்பட்டி தீயணைப்புத் துறை வீரா்கள் உதவியுடன் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.