கட்சி நிலைப்பாடு குறித்து பேட்டி அளிக்க வேண்டாம்: இபிஎஸ் வேண்டுகோள்
கட்சியின் நிலைப்பாடு குறித்து பேட்டி அளிக்க வேண்டாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
கட்சியின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்தான தகவல்களை, கட்சியின் தலைமை உரிய நேரத்தில், உரிய முறையில் அவ்வப்போது தெரிவிக்கும்.
ஆகவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கட்சி நிர்வாகிகளும்; கட்சியின் மீது பற்று கொண்டுள்ளவர்களும், கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த எவ்வித கருத்துகளையும், தலைமையின் அனுமதி பெறாமல், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் இன்னபிற தகவல் தொடர்பு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என்று அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!