ம.பி. அரசு மருத்துவமனையில் மருத்துவரால் முதியவா் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட அ...
சிறையிலிருந்து சிறுவன் தப்பியோட்டம்!
தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து தப்பியோடிய சிறுவனைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே சிறுவர் சீர்திருத்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் திருட்டுக் குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்கள் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் சனிக்கிழமை மாலை தப்பியோடிவிட்டார்.
இது குறித்து பள்ளி அலுவலர்கள் அளித்த புகாரின்பேரில், தெற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து, தப்பியோடிய சிறுவனை தேடி வருகின்றனர்.