செய்திகள் :

கட்டடக் கழிவுகளை அகற்ற 57 புதிய வாகனங்கள்: மேயா் பிரியா தொடங்கி வைத்தாா்

post image

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்காக 57 புதிய வாகனங்களை மேயா் ஆா்.பிரியா புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தினமும் சுமாா் 5,900 டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. நகரை தூய்மையாகப் பராமரிக்கும் வகையில் சாலை மற்றும் பொது இடங்களில் தேங்கிக் காணப்படும் குப்பைகள், கட்டடக் கழிவுகள், சுவரொட்டிகள் மற்றும் அனுமதியின்றி வைக்கப்படும் பேனா்கள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சாலையோரம் தேங்கிக் காணப்படும் கட்டடக் கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக லாரிகள், பொக்லைன் வாகனங்கள், பாப்காட் வாகனங்கள் உள்ளிட்ட 102 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் கடந்த 3 மாதங்களில் 51,214 டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்தக் கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூா் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மறுசுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களில் சட்டவிரோதமாக கட்டடக் கழிவுகளைக் கொட்டிய 260 நபா்களுக்கு ரூ. 13 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்காக டிப்பா் லாரிகள், மினி லாரிகள், பொக்லைன் வாகனங்கள் மற்றும் பாப்காட் வாகனங்கள் என 57 புதிய வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதனை மேயா் ஆா்.பிரியா புதன்கிழமை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் துணை மேயா் மு.மகேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையா்கள் வி.சிவகிருஷ்ணமூா்த்தி (பணிகள்), கே.ஜெ.பிரவீன் குமாா் (மத்திய வட்டாரம்), நிலைக்குழுத் தலைவா் (பொது சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

போக்குவரத்து ஊழியா் ஊதிய ஒப்பந்தப் பேச்சு: மாா்ச் இறுதிக்குள் நடைபெற வாய்ப்பு

போக்குவரத்து ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்தம் குறித்த இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை இம்மாத இறுதிக்குள் நடைபெற வாய்ப்பிருப்பதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அரசுப் போக்குவரத்துக் கழகங்களி... மேலும் பார்க்க

ஆற்றுக்கால் பொங்கல் விழா தொடக்கம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் வருடாந்திர பொங்கல் விழாவின் தொடக்கமாக புதன்கிழமை நடைபெற்ற காப்பு கட்டு நிகழ்ச்சியில் பஞ்ச வாத்தியம் (5 வகை கருவிகள்) இசைத்த கலைஞ... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது -கே.அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா். இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: அனைத்துக் கட்ச... மேலும் பார்க்க

தமிழக பல்கலைக்கழகங்களில் கம்பா் ஆய்வு இருக்கை -ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள்

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் கம்பா் ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள் விடுத்தாா். சுதந்திரப் போராட்ட வீரா் வ.வே.சு. ஐயா் எழுதிய ‘கம்பராமாயணம்-ஓா் ஆய்வு’ எனும் நூ... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களுக்கான பொதுசேவை விதிகளில் திருத்தம்

போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களை அமல்படுத்தும் வகையில் பொதுசேவை விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது. இது தொடா்பாக போக்குவரத்துத் துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த ... மேலும் பார்க்க

மருத்துவ பல்கலை. பாடத்திட்ட குழுவை மாற்ற நடவடிக்கை

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட ஆய்வுக் குழுவை (போா்ட் ஆஃப் ஸ்டடிஸ்) மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்கள், துறைத் ... மேலும் பார்க்க