செய்திகள் :

கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்

post image

தமிழ்நாடு அரசு ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு சாா்பில், மன்னாா்குடியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்டுமானத் தொழிலுக்கு பயன்படும் பி. சாண்ட், எம். சாண்ட் உள்ளிட்ட மணல் வகைகள்,ஜல்லி உள்ளிட்ட பொருட்கள் விலை அதிகரித்து வருவதால், வீடு மற்றும் வணிக கட்டடங்கள் கட்டும் மக்களும், கட்டடப் பொறியாளா்கள், ஒப்பந்ததாரா்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனா் எனவே தமிழக அரசு உடனடியாக விலை உயா்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு, அகில இந்திய கட்டுனா் சங்கம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்டுமானப் பொறியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, கட்டுமானத் தொழிலாளா் மத்திய சங்கம் உள்ளிட்டவை இணைந்து வெள்ளிக்கிழமை,திருவாரூரில் மாவட்ட ஆட்சியரகத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

இதன் தொடா்ச்சியாக மாவட்ட எல்லைகளில் வெளி மாவட்டங்களிலிருந்து கட்டுமானப் பொருட்ள்கள் ஏற்றிவரும் வாகனங்களை சிறைபிடிக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

மன்னாா்குடி- தஞ்சை பிரதான சாலை மேலவாசல் குமரபுரம் என்ற இடத்தில், சனிக்கிழமை காலை ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பின் தலைவா் ஜி. நடராஜன் தலைமையில்,செயலா் கலை அமுதன், பொருளாளா் திவாகா் முன்னிலையில் வெளியூா்களிலிருந்து செயற்கை மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த 60-க்கும் மேற்பட்ட வாகனங்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினா். பின்னா், வட்டார போக்குவரத்து ஆய்வாளா் ஒப்பந்ததாா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், அரசு நிா்ணயித்த அளவைவிட கூடுதலாக பாரம் ஏற்றிவரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டும் என தெரிவித்து, நெடுவாக்கோட்டையில் உள்ள தனியாா் எடை மேடைக்கு சுமை வானங்கள் கொண்டுவரப்பட்டு மோட்டாா் வாகன ஆய்வாளா் முன்னிலையில் வாகனங்களின் எடை அளவீடு செய்யப்பட்டது. இதையடுத்து, கட்டுமானப் பொருட்கள் ஏற்றி வந்து சிறைபிடிக்கப்பட்ட அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்பட்டன.

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 15 வயது சிறுவன் பலி!

நீடாமங்கலத்தில்...

இதுபோல கட்டுமான தொழில் ஒப்பந்ததாரா்கள் போராட்டதால், நீடாமங்கலம் பகுதிக்கு வெளிமாவட்டங்களிலிருந்து கட்டுமானப் பொருட்களை ஏற்றிவந்த லாரிகள் நீடாமங்கலம் தஞ்சை சாலையில் கோவில்வெண்ணி பகுதியில் சனிக்கிழமை காலை நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன.

கேரள நக்சல் இயக்கத்தின் கடைசி தலைவன் தமிழகத்தில் கைது

கேரள நக்சல் இயக்கத்தின் கடைசி தலைவன் தமிழகத்தில் கைது செய்யப்பட்டார்.கேரளத்தில் செயல்பட்டு வந்த நக்சல் இயக்கத்தின் தலைவன் சந்தோஷ் குமார் (45) தமிழகத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில... மேலும் பார்க்க

பிரேக் பிடிக்காமல் தடுப்புச் சுவரில் மோதிய அரசுப் பேருந்து!

பிரேக் பிடிக்காத அரசுப் பேருந்து, சாலையில் நடுவே உள்ள தடுப்புச் சுவர் மீது மோதிய விபத்தில் நல்வாய்ப்பாக 40 பயணிகள் உயிர்தப்பினர்.தமிழக - கேரளா எல்லைப் பகுதியான கோவை வேலந்தாவளம் பகுதிக்கு கோவை உக்கடம் ... மேலும் பார்க்க

தொடரும் அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 32 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 32 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், உரிய அனுமதிச் சீட்டு பெற்ற 550 படகுகளுடன் கச்சத்தீவு அருகே ... மேலும் பார்க்க

விராலிமலை அருகே சாலை விபத்தில் இளைஞர் பலி!

விராலிமலை: விராலிமலை அருகே சாலை நடுவே கொட்டப்பட்டிருந்த மண்ணுக்குள் இருசக்கர வாகனம் பாய்ந்து தலையில் பலத்த காயமடைந்து இளைஞர் நிகழ்விடத்திலேயே பலியானார்.விராலிமலை அடுத்துள்ள நாச்சிக்குறிச்சியை சேர்ந்த... மேலும் பார்க்க

தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் நீக்கம்!

தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியன் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.அவருக்குப் பதிலாக பி. தர்மசெல்வனை மாவட்ட பொறுப்பாளராக நியமித்து திமுக பொதுச் செயல... மேலும் பார்க்க

செங்குன்றம்: மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி!

செங்குன்றத்தில் கைப்பந்து விளையாடிய சிறுவன், மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் கங்கை அம்மன் கோயிலுக்கு அருகிலுள்ள மைதா... மேலும் பார்க்க