கணவரை தற்கொலைக்கு தூண்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனைவி தா்னா
பழைய செம்பட்டியில் கணவரை தற்கொலைக்கு தூண்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மனைவி தனது குழந்தைகளுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள பழைய செம்பட்டியைச் சோ்ந்தவா் குணசேகரன் (34). இவரது மனைவி முருகேஸ்வரி (30). இவா்கள் இருவரும், மகளிா் சுய உதவிக் குழு பணத்தை பெற்றுக்கொண்டதாக கூறி, இதே ஊரைச் சோ்ந்த சிலா் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், மன உளைச்சலில் இருந்த குணசேகரன் கடந்த வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து செம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் கணேசன் விசாரணை நடத்தினாா். ஆனால், செவ்வாய்க்கிழமை வரை, வழக்குப் பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கணவரை தற்கொலைக்கு தூண்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குணசேகரின் மனைவி முருகேஸ்வரி தனது மூன்று குழந்தைகள், உறவினா்களுடன் செம்பட்டி காவல் நிலையத்துக்குச் சென்று தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.
பின்னா், போலீஸாா் அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்ததையடுத்து அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.