செய்திகள் :

கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!

post image

கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கடந்த 2003-ல் குப்பநத்தம் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் முந்திரிக்காடு பகுதியில் காதில் விஷம் ஊற்றிக் கொல்லப்பட்ட முருகேசன் - கண்ணகி ஆணவக் கொலை வழக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனையும் கண்ணகியின் தந்தை உள்ளிட்ட 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மேலும் 12 பேரின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து தண்டனை பெற்ற கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதன்படி, கண்ணகியின் அண்ணன், தந்தை உள்பட 13 பேரின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே 1 முதல் கோடை விடுமுறை!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே 1-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை ஒரு மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நாள்களில் விடுமுறை கால நீதிமன்றம் செயல்படும் என்று தெரிக்கப்பட்டுள்ளது.கோடைக் கால... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு!

36 நாள்கள் நடைபெற்ற தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன்(ஏப். 29) நிறைவு பெற்றது.தமிழக சட்டப்பேரவையில் இந்த நிதியாண்டின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 1... மேலும் பார்க்க

'காலனி' என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கம்: முதல்வர் அறிவிப்பு!

'காலனி' என்ற சொல் வசை சொல்லாக மாறி இருப்பதால், அந்த சொல்லை அரசு ஆவணங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார்.இது குறித்து பேரவையில் முதல்வர் ஸ்டாலின் ... மேலும் பார்க்க

வலுக்கட்டாய நடவடிக்கையால் கடன் வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறை: பேரவையில் மசோதா நிறைவேற்றம்

சென்னை: கட்டாயப்படுத்தி கடன் வசூலித்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் மசோதாவானது பேரவையில் இன்று(ஏப். 29) நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்தப் புதிய சட்ட மசோதாவின்படி, கடன் வாங்கியவா... மேலும் பார்க்க

தமிழ்ச் சமுதாயத்துக்கு ஒளி கொடுக்கும் பாவேந்தர் பாரதிதாசன் புகழ் ஓங்குக! - முதல்வர் புகழாரம்!!

புகழ்பெற்ற கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "வேழத்தின் வலிமையோடு - திகட்டாத தீந்தமிழின் சுவையில், மட... மேலும் பார்க்க

புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமியின் வீட்டில் வெடிகுண்டு இருப்... மேலும் பார்க்க