செய்திகள் :

விஜய் டிவி பிரச்னைக்கு அடுத்த நாளே ஜீ தமிழில் வாய்ப்பு: மணிமேகலை உருக்கம்

post image

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்னைக்கு மறுநாளே ஜீ தமிழில் வாய்ப்பு கிடைத்ததாக தொகுப்பாளர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.

முழுவதும் பாடல்களுக்காக தொடங்கப்பட்ட சன் மியூசிக் சேனலில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தொகுப்பாளர் மணிமேகலை.

இவர் தனக்கே உரித்தான நகைச்சுவைக் கலந்த சுவாரசியத்துடன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவார்.

15 ஆண்டுகளாக தொகுப்பாளராக உள்ள மணிமேகலை, தன் கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார்.

மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கடந்த 4 சீசன்களிலும் பங்கெடுத்து வந்த மணிமேகலை, முன்னதாக நிறைவு பெற்ற 5-வது சீசன் நிகழ்ச்சியை ரக்‌ஷனுடன் தொகுத்து வழங்கினார்.

மணிமேகலை

இதில், மணிமேகலைக்கும் சமையல் கலைஞராகப் பங்கேற்ற பிரியங்காவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதாக இல்லை என அறிவித்தார். பின்னர் எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்தார் மணிமேகலை.

இந்த விவகாரத்தில் பலரும் பிரியங்காவுக்கு ஆதரவாக இருந்த நிலையில், ரசிகர்கள் பலர் மணிமேகலைக்கு ஆதரவு அளித்துவந்தனர்.

கணவருடன் மணிமேகலை

ஜீ தமிழ் வாய்ப்பு

2025ஆம் ஆண்டுக்கான சிறந்த என்டர்டெயினர் விருது இம்முறை மணிமேகலைக்கு வழங்கப்பட்டது.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய மணிமேகலை, எனக்குப் பிடித்த தொகுப்பாளர் பணியை வேண்டாம் என்று என்னை சொல்ல வைத்தார்கள். இதன் பிறகு என் எதிர்காலமே முடிந்துவிட்டது என்பதைப் போன்று பலர் பேசத்தொடங்கினர். என் வாழ்க்கையே முடிந்துவிட்டது என அறிவுரை கூறினர். ஆனால், அந்த பிரச்னைக்கு மறுநாளே ஜீ தமிழில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

மணிமேகலையின் இந்தப் பேச்சுக்கு அவரின் ரசிகர்கள் பலர் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிக்க | ’நீ நான் காதல்’ நாயகியின் புதிய தொடர் அறிவிப்பு!

அனுபமாவின் கிஷ்கிந்தபுரி கிளிம்ஸ் விடியோ!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள கிஷ்கிந்தபுரி படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வரு... மேலும் பார்க்க

விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் மீண்டும் கைதான மலையாள ராப் பாடகர்! ஏன்?

கேரளத்தின் கொச்சி மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட பிரபல ராப் பாடகரான வேடன் ஜாமினில் விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் தற்போது வனத் துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மலையாள திரையுலகைச் சேர்ந... மேலும் பார்க்க

7 மாதங்களாக வலியுடனே விளையாடினேன்..! நடுவரைத் தாக்கிய ரியல் மாட்ரிட் வீரருக்கு அறுவைச் சிகிச்சை!

ஜெர்மனியைச் சேர்ந்த அன்டோனியோ ரூடிகர் தனது ஆக்ரோஷமான பாணிக்கு புகழ்பெற்றவர். சிறந்த டிஃபெண்டராக அறியப்படும் இவர் ரியல் மாட்ரிட் அணிக்கு விளையாடி வருகிறார்.ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்... மேலும் பார்க்க

தி வெர்டிக்ட் ரிலீஸ் தேதி!

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள தி வெர்டிக்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடா போடி படத்தில் அறிமுகமான நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு படங்கள... மேலும் பார்க்க

வீட்டில் குடும்பப் பெண், வெளியே புரட்சிப் பெண்: தேஜஸ்வினியின் புதிய தொடர் அயலி!

வித்யா நம்பர் 1 தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை தேஜஸ்வினி அயலி என்ற புதிய தொடரில் நடிக்கவுள்ளார். இந்தத் தொடரின் முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் வீட்... மேலும் பார்க்க

ஜூனியர் என்டிஆர்- பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தேதி!

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸுடன் கடைசியாக இயக்கிய சலார் 1 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீத... மேலும் பார்க்க