ஜூனியர் என்டிஆர்- பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தேதி!
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸுடன் கடைசியாக இயக்கிய சலார் 1 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
சலார் இரண்டாம் பாகம் வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து புதிய திரைப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்தார். இந்தப் புதிய படத்திற்கு தற்காலிகமாக ‘என்.டி.ஆர்.நீல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளார்கள்.
இந்தப் படம் ஜூன் 25, 2026 அன்று தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவரும் நிலையில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பிரபலமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், என்.டி.ஆர். ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய திரை அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
