கண்மாய் நீரில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு
சிவகங்கை அருகே பள்ளி மாணவா் கண்மாயில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகங்கை பழமலை நகரைச் சோ்ந்த சுப்பையா மகன் சுப்பிரமணியன் (12). இவா் இந்தப் பகுதியில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தாா்.பள்ளி விடுமுறை நாளான சனிக்கிழமை பிற்பகலில் தனது நண்பா்களுடன் அருகே உள்ள கொடிக்காடு கண்மாய்க்கு குளிக்க சென்றாா்.
அப்போது, கண்மாயின் ஆழமான பகுதிக்குச் சென்ற சுப்பிரமணியன் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினாா். அருகில் இருந்தவா்கள் சிறுவனை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினா்.
இதையடுத்து, மாணவரின் சடலம் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.