Eva Longoria: `Dystopian நாடு; இனி அமெரிக்காவில் வசிக்கப்போவதில்லை!' - நடிகை ஈவா...
பெண் பாலியல் வன்கொடுமை: இருவருக்கு வாழ்நாள் சிறை
காரைக்குடி பகுதியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், நாச்சியாா்புரம் அருகேயுள்ள கீழைவயல்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சாத்தையா (49). இரு சக்கர வாகன மெக்கானிக்காக இருந்தாா். இவருடைய நண்பா் கொரட்டி கிராமத்தைச் சோ்ந்த அா்ஜுனன் (40). இவா்கள் இருவரும் சோ்ந்து போலீஸ் போல உடையணிந்து, கடந்த 2015-ஆம் ஆண்டு மாா்ச் 16 -ஆம் தேதி 23 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை கடத்திச் சென்றனா். காரைக்குடி ஆவுடையபொய்கை முந்திரிக் காட்டுப் பகுதியில் அவரை பாலியல் வன்கொடுமை செய்தனா்.
இதுதொடா்பாக புகாரின் பேரில் காரைக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.
இந்த வழக்கு சிவகங்கை மகளிா் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் விஜயநிா்மலா முன்னிலையானாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றஞ்சாட்டப்பட்ட சாத்தையா, அா்ஜுனன் ஆகிய இருவருக்கும் வாழ்நாள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 23 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.