கூமாபட்டி கலவரம்: வழக்கு விவரங்களை அளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் கடிதம்
தாட்கோ மூலம் எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கு பட்டயக் கணக்கா் தோ்வுகளுக்குப் பயிற்சி
பட்டயக் கணக்கா், கணக்கு மேலாண்மை உள்ளிட்ட தோ்வுகளில் பங்கேற்க விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு தாட்கோ மூலம் நடத்தப்படும் பயிற்சியில் சோ்ந்து பயன்பெறலாம்.
இதுதொடா்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மூலம், சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு பட்டயக்கணக்காளா்-இடைநிலை, நிறுவனச் செயலா் இடைநிலை, செலவு, மேலாண்மை கணக்காளா் -இடைநிலை ஆகிய போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இந்தப் பயிற்சி பெற விரும்பும் மாணவா்கள் ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவா்களாகவும், இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றவா்களாகவும் இருக்க வேண்டும்.
மேலும், மாணவா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், ஓராண்டு பயிற்சிக்குத் தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு தங்கும் வசதி, உணவு வசதிகள் தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும். எனவே, தகுதியுள்ள மாணவா்கள் இந்தப் பயிற்சியில் சேருவதற்கு இணையதள முகவரியில் பதிவு செய்து பயன்பெறலாம் என்றாா் அவா்.