முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்த இளம்பெண் மீது வழக்கு
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பிரசார இயக்கம்
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி, லாடனேந்தல், மடப்புரம், திருப்புவனம் ஆகிய இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது.
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து நடந்த பிரசாரத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் ஈஸ்வரன் தலைமை வகித்தாா். இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் வீரபாண்டி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் சக்திவேல், ஜெயராமன், அய்யம்பாண்டி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். திருப்புவனம் ஒன்றியத்தில் 10 இடங்களில் இந்த பிரசார இயக்கம் நடைபெற்றது.