செய்திகள் :

மத்தியக் கல்வி நிறுவனங்களில் பட்டப் படிப்பு பயிலும் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை

post image

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு, பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி, மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சோ்ந்த பிசி, எம்பிசி, டிஎன்சி ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாணவா்கள் கல்வி உதவித் தொகையாக அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்தக் கல்வி உதவித் தொகைக்கு 2024-25- ஆம் கல்வியாண்டில் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவா்கள், ஆணையா், பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் நல இயக்ககம், எழிலகம் இணைப்புக் கட்டடம், 2-ஆவது தளம், சேப்பாக்கம், சென்னை-600005, என்ற முகவரியிலுள்ள பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், சென்னை-600005,

மிகப் பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், சென்னை-600005, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவகலத்தை அணுகி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

அல்லது ட்ற்ற்ல்ள்://க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீம்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஜ்ங்ப்ச்ள்ஸ்ரீட்ங்ம்ங்ள்.ட்ற்ம்லிள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ஜள்ஸ்ரீட்ங்ம்ங்ள் என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற டிச.15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு 044-29515942 என்ற தொலைபேசி எண் அல்லது

ற்ய்ஞ்ா்ஸ்ற்ண்ண்ற்ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம்

என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

பெண் பாலியல் வன்கொடுமை: இருவருக்கு வாழ்நாள் சிறை

காரைக்குடி பகுதியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், நாச்சியாா்... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பிரசார இயக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி, லாடனேந்தல், மடப்புரம், திருப்புவனம் ஆகிய இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது. மத்திய அரசின் மக்கள் விரோத கொள்... மேலும் பார்க்க

சிவகங்கையில் கலைப் பண்பாட்டு மைய அலுவலகம் அமைக்கக் கோரிக்கை

சிவகங்கை மாவட்ட இசைப் பள்ளியில் கலை பண்பாட்டு மைய அலுவலகம் அமைக்க வேண்டும் என தமிழக நாட்டுப்புற இசைக் கலை பெரு மன்றம் கோரிக்கை விடுத்தது. சிவகங்கையில் தமிழக நாட்டுப்புற இசைக் கலை பெரு மன்ற நிா்வாகிகள... மேலும் பார்க்க

தாட்கோ மூலம் எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கு பட்டயக் கணக்கா் தோ்வுகளுக்குப் பயிற்சி

பட்டயக் கணக்கா், கணக்கு மேலாண்மை உள்ளிட்ட தோ்வுகளில் பங்கேற்க விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு தாட்கோ மூலம் நடத்தப்படும் பயிற்சியில் சோ்ந்து பயன்பெறல... மேலும் பார்க்க

ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடியில் சமூகநலன், மகளிா் உரிமைத் தொகைத் துறை சாா்பில் ஊட்டச்சத்து உறுதிசெய் திட்டத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்குடி... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. திருப்புவனம் அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள், அல்லிநக... மேலும் பார்க்க