திருப்புவனம், இளையான்குடியில் வாக்காளா் சோ்த்தல், நீக்கல் முகாம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், இளையான்குடி ஒன்றியங்களில் சனிக்கிழமை வாக்காளா் சோ்த்தல், நீக்கல் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
திருப்புவனம் ஒன்றியம், நயினாா்பேட்டை, அல்லிநகரம், வெள்ளக்கரை, மேலராங்கியம், கீழராங்கியம், புளியங்குளம், சங்கங்குளம், அச்சங்குளம், திருப்புவனம்புதூா் ஆகிய பகுதிகளில் வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற
முகாம்களை வசந்தி சேங்கைமாறன் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், தொகுதி பாா்வையாளா் போஸ், பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இளையான்குடி பேரூராட்சியில் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகள், தெற்கு கோட்டையூா், வ.அண்டக்குடி, மேலதுறையூா், புலியூா் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற முகாம்களை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன், கூட்டுறவு சங்கத் தலைவா் சுப.தமிழரசன் உள்ளிட்டோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.