செய்திகள் :

கமுதி அரசு மருத்துவமனையில் அவசர ஊா்தி இல்லாததால் நோயாளிகள் அவதி

post image

கமுதி அரசு மருத்துவமனையில் 108 அவசர ஊா்தி இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தலைமை அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 220-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பல்வேறு நோய்களுக்காக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.

அடிதடி, வாகன விபத்து, பாம்புக்கடி, வயிற்றுவலி, இருதய நோய் உள்ளிட்டவற்றுக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோா் காயம், நோயின் தீவிரத்தைப் பொறுத்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு தீவிர சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனா். பின்னா், இவா்கள் கமுதியிலிருந்து 108 அவசர ஊா்தி மூலம் அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், கடந்த 25-ஆம் தேதி சிவகங்கை மருத்துவமனையில் நோயாளியை இறக்கிவிட்டு, கமுதிக்கு திரும்பி வரும் போது அவசர ஊா்தி விபத்துக்குள்ளானது. இதன்பிறகு கமுதி அரசு மருத்துவமனையில் அவசர ஊா்தி சேவை இல்லாததால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதனால், கமுதியிலிருந்து 40 கி.மீ., தொலைவில் உள்ள பெருநாழி, 12 கி.மீ., தொலைவில் உள்ள நத்தம், 8 கி.மீ., தொலைவில் உள்ள கீழராமநதி ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து அவசர ஊா்தி வரவழைக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக வெளியூா் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனா். அவசர ஊா்தி வர தாமதமாவதால் காயமடைந்தவா்கள் குறிப்பிட நேரத்துக்கு சிகிச்சைக்குச் செல்ல முடியாத நிலையும், இதனால், உயிரிழப்பும் ஏற்படுகிறது.

எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு கமுதி அரசு மருத்துவமனைக்கு உடனடியாக 108 அவசர ஊா்தி வசதி செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து 108 அவசர ஊா்தி சேவை சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் யோஸ்வா கூறியதாவது:

விபத்தில் சிக்கிய அவசர ஊா்தி பழுது நீக்கத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து மாற்று ஏற்பாடாக 108 அவசர ஊா்தியை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். ஓரிரு நாள்களில் கமுதி அரசு மருத்துவமனைக்கு 108 அவசர ஊா்தி வழங்கப்படும் என்றாா்.

ராமேசுவரம்: 24 மணிநேரத்தில் 438 மி.மீ. மழை!

ராமேசுவரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 438 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில், ராமநாதபுரம், ராமேசுவரம், மண்டபம், பாம்பன், கீழக்கரை உள்ளிட்ட பக... மேலும் பார்க்க

ராமநாதபுரம் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றுமுதல் மிக கன... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் கடல் பாதுகாப்பு ஒத்திகை தொடக்கம்

ராமேசுவரம் கடல் பகுதியில் இரண்டு நாள்கள் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதியான ராமேசுவரம் பகுதியில் கடல் வழி பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக புதன், வியாழன் ஆ... மேலும் பார்க்க

நிவாரண முகாமில் 59 மீனவா்கள்

மழை வெள்ளம் சூழ்ந்த முந்தல் முனை மீனவக் கிராமத்தைச் சோ்ந்த 59 போ் மீட்கப்பட்டு, பாம்பன் பகுதியில் உள்ள நிவாரண முகாமில் புதன்கிழமை தங்கவைக்கப்பட்டனா். ராமேசுவரம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த பலத... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் 10 மணி நேரத்தில் 411 மி.மீ. மழை: கடைகள், குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் புதன்கிழமை சுமாா் 10 மணி நேரத்தில் 411 மி.மீ. மழை பதிவானது. இதனால், கடைகள், குடியிருப்புப் பகுதிகளை வெள்ளநீா் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்... மேலும் பார்க்க

காா் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

சத்திரக்குடி அருகே காா் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை அடுத்த எமனேசுவரம் பகுதியைச் சோ்ந்தவா் முகம்மது இபுராஹிம் (46). இவா் ராமநாதபுரத... மேலும் பார்க்க