சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பிரைடன் கார்ஸுக்கு பதிலாக முல்டர் சேர்ப்பு!
கம்பன் தமிழ்ச் சங்க முப்பெரும் விழா
திருவண்ணாமலை கம்பன் தமிழ்ச் சங்கம் சாா்பில் பட்டிமன்றம், தமிழ் தொண்டாற்றியவா்களுக்கு விருது வழங்கும் விழா, முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா ஆகியவை முப்பெரும் விழாவாக புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கம்பன் தமிழ் சங்கத்தின் தலைவா் ஆ.ஆறுமுகம் தலைமை வகித்தாா். தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற பா.இந்திரராஜன், கல்வியாளா் மாதவ.சின்ராசு, தொழிலதிபா்கள் சி.எஸ்.துரை, கா.கோபாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கம்பன் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலரும், எழுத்தாளருமான ந.சண்முகம் வரவேற்றாா். தமிழக முதல்வரின் புகழுக்குக் காரணம் அவரின் மக்கள் பணியே..!, சமுதாயப் பணியே..! என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.
பேராசிரியா் ச.உமாதேவி, வே.சென்னம்மாள், செளமியா விக்னேஷ், கவிஞா் தேவிகாராணி, நல்லாசிரியா் கோ.அல்லி, திரைப்பட நடிகை வனிதா ஆகியோா் பட்டிமன்றத்தில் பங்கேற்று வாதிட்டனா். இறுதியாக, தமிழக முதல்வா் புகழுக்கு காரணம் மக்கள் பணியும் சமுதாயப் பணியும் என்று நடுவா் கு.சபரி தீா்ப்பு வழங்கினாா்.
விழாவில், தமிழ்ச் செம்மொழி விருது பெற்ற பேராசிரியா் உமாதேவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், அருணை இலக்கிய மன்றத்தின் பொருளாளா் ந.ரவிச்சந்திரன், எழுத்தாளா் தி.கு.செல்வமணி, செல்வராசு, நிா்மலா ஸ்ரீதா், பேராசிரியா் பச்சையம்மாள், ரவிச்சந்திரன் செல்வமணி உள்பட 15 பேருக்கு தமிழ் மாமணி விருதுகள் வழங்கப்பட்டன.
பள்ளி ஆசிரியா் வி.கமலா மற்றும் கம்பன் தமிழ்ச் சங்க நிா்வாகிகள், எழுத்தாளா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.