`ஓட்டு கேட்டு வராதீங்க'-அமைச்சர் முத்துசாமிக்கு எதிராக பிளக்ஸ்; ஈரோட்டில் பரபரப்...
கம்பி கட்ன கதை: "அவர் சொல்லுற கதையில நாம நடிச்சிட மாட்டோமானு தோணும்" - சிங்கம்புலி குறித்து நட்ராஜ்
மங்காத்தா மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் நட்ராஜ் (நட்டி), சிங்கம்புலி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'கம்பி கட்ன கதை'.
ஒரு ஜாலியான ரோலர் கோஸ்டர் படமாக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படம் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் 'கம்பி கட்டுன கதை' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (அக்.7) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய நட்ராஜ், "இந்தப் படத்தின் இயக்குநர் ராஜநாதன் கதை சொல்லும்போதே நிறுத்தி நிதானமாகச் சொன்னார்.
அவருக்கு இது முதல் படம் என்பதால் ஸ்கிரிப்ட் பேப்பர் கேட்டேன். முதல் தடவை அவர் ஒன்று கொடுத்தார். எனக்கு அது பிடிக்கவில்லை.
பிறகு இரண்டாவது முறை அந்தக் கதையைக் கொஞ்சம் திருத்திக் கொடுத்தார். அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதுதான் 'கம்பி கட்டுன கதை' ஆக மாறியது.
சிங்கம்புலி சார் அவ்வளவு அருமையாக கதை சொல்வார். அந்தக் கதையைக் கேட்கும்போது அதில் நாம் நடித்திட மாட்டோமா? அல்லது ஒளிப்பதிவு செய்திட மாட்டோமா? என்று தோன்றும் அந்த அளவிற்குச் சொல்வார்.

ஒருத்தரை ஒருத்தர் சப்போர்ட் செய்துகொண்டு இந்தப் படத்தில் நடித்திருக்கிறோம். என்னுடைய எல்லா படத்திற்கும் ஆதரவு கொடுத்த மாதிரி இந்தப் படத்துக்கும் ஆதரவு கொடுங்கள்" என்று பேசியிருக்கிறார்.