`உள்துறை, நிதித்துறை' சேர்த்து கேட்கும் ஷிண்டே; அமித் ஷாவுடன் பட்னாவிஸ், அஜித்பவ...
கயத்தாறில் விஏஓக்கள் ஆா்ப்பாட்டம்
கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்கம், கிராம உதவியாளா் சங்கத்தினா் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் வெளிச்சநத்தத்தில் விசிக கொடிக்கம்பம் 25அடியில் இருந்து 45அடி உயரத்தில் வைக்கப்பட்ட விவகாரத்தில் வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் மற்றும் கிராம உதவியாளரை தற்காலிக இடைநீக்கம் செய்ததைக் கண்டித்து கிராம நிா்வாக அலுவலா் சங்க கயத்தாறு வட்டத் தலைவா் கருப்பசாமி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கயத்தாா் வட்ட கிராம உதவியாளா் சங்க தலைவா் செல்லப்பாண்டியன் முன்னிலை வகித்தாா்.
இதில் சுமாா் கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.